Sunday, March 7, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...

இன்று மதியம் , திருவான்மியூர் தியாகராஜாவில் , " விண்ணைத் தாண்டி வருவாயா" திரைப்படம் பார்த்தேன். வேறு யாரும், "கம்பேனிக்கு" வரவில்லை. நான் மட்டுமே! நல்ல கூட்டம். என்னுடைய திரைப்பட வரலா....ற்றில் அதிக அளவு இளம்பெண்கள் கூட்டம் பார்த்தது, இந்த திரைப்படத்தில் தான். 45 ரூபாய் டிக்கெட். ஒருவாரம் ஆகியும், ஞாயிற்றுக் கிழமை மதிய ஷோவிற்கு இந்த அளவு கூட்டம் வருகிறதென்றால் , படம் உண்மையிலேயே HIT தான், ஏனென்றால்  இப்போதெல்லாம், 50 நாட்கள் படம் ஓடுவதே , ஒரு வரலாறுதான்.




படத்திற்கு, சிம்பு - த்ரிஷா ஜோடி , கவுதம் வாசுதேவ மேனன் இயக்கம் என்பதையெல்லாம் "தாண்டி" , A .R ரஹ்மான் இசை என்பதே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. அவரின் பெயரை திரையில் காணும் போதே , திரையரங்கில் விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் "விண்ணை"ப் பிளக்கின்றன ! ரஹ்மான் ரஹ்மான் தான். சிம்புவை இவ்வளவு SMART ஆக பார்க்கும் போது , நன்றாகத்தான் இருக்கிறார். உண்மையில் , இது யாருமே எதிர்பார்க்காத COMBINATION தான்.ஆனால், நன்றாக WORKOUT ஆகியிருக்கிறது. EXPESSIONS  இல் ஆயிரம் வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார் சிம்பு. இந்த மாதிரி படங்கள் மேலும் பண்ணுங்க பாஸ் ! நளினி ஸ்ரீராமின் உடைகளில் த்ரிஷாவின் அழகு கூடியிருக்கிறது - வயது குறைந்திருக்கிறது.



நாம், தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் தான், படத்தின் HERO - HEROINE (ஸ்பெல்லிங் கரெக்டா ?!) . ஆரம்பத்தில், ஒரு வித்தியாசமான காதல் கதை - மறுபடியும் என்று விளம்பரப் படுத்தினார்கள்.அது நிஜம்தான்.கவுதம்  வாசுதேவ மேனன் , "நாங்களும் LOVE SUBJECT படம் எடுப்போம்ல ?! " என்று சவால் விட்டு சாதித்திருக்கிறார்.வாழ்த்துக்கள் கவுதம் வாசுதேவ மேனன் ! யாருப்பா அந்த கணேஷ் ?! எல்லாருக்கும் , இதுமாதிரி ஒரு "சீனியர்" FRIEND  இருந்தால் நல்லாயிருக்குமே என்று தோன்ற வைக்கிறார் ! உண்மையிலேயே , அவரா 'காக்க காக்க ' கேமரா மேன் ?! நான் என்னவோ , R .D .ராஜ சேகர் - னு தானே நெனைசுக்கிடிருந்தேன் ?!



மனோஜ் பரமஹம்சா வின் ஒளிப்பதிவு மிகவும் அருமை.இது அவருக்கு முதல் படம் (தமிழில்  ?) என்று நினைக்கிறேன்.படம் முழுவதும், ரஹ்மானின் ஆதிக்கம் மேலோங்கியே இருக்கிறது. அதுதான் ரஹ்மான் ! 'ஏன் இதயம் ' என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்றே போதும் - படம்  முடியும் வரை ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது நம் செவிகளில் ! வசனங்களில் ஆங்கிலக் கலப்பு அதிகம்தான் என்றாலும் ,தவிர்க்க முடியாததாகிறது .

விண்ணைத் தாண்டி வருவாயா - நல்லாயிருக்கு சார்!!

10 comments:

  1. மனோஜ் பரமஹம்சா //
    2nd film, first is Eeram

    ReplyDelete
  2. @ILA(@)இளா...
    தகவலுக்கு நன்றி நண்பரே....
    வருகைக்கு நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete
  3. நடுநிலையான விமர்சனம்...!!! வாழ்த்துக்கள்...!!!

    கடைசிக்கு முன்பான அந்த மலையாள பாடலை நான் தமிழ் பாடல் வழக்கம் போல நம்மக்குதான் புரியவில்லை என்று நினைத்தேன்...!!! அந்த பாடல் படம்க்கபட்ட விதம் மிகவும் நேர்த்தியாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது...!!!

    ReplyDelete
  4. விண்ணை தாண்டி வந்திருச்சி
    அப்போ படம் உங்களையும் கவர்ந்திடிச்சு

    ரஹ்மான் இசை இப்படத்திற்கு மேலும் ஒரு பலம்
    சரியான திறனாய்வு

    ReplyDelete
  5. @ஹாய் அரும்பாவூர்
    நன்றி நண்பரே....
    வருகைக்கும் , பின்னூடத்திற்கும் ,வாழ்த்துகளுக்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete
  6. மிக சிறந்து படைப்பு.. சிம்பு தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து உள்ளார்..
    முடிவு அற்புதம்..

    ReplyDelete
  7. @SincerelyFriend
    முடிவு அற்புதமானது மட்டுமல்ல .... புதியதும் கூட !!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...