Tuesday, March 30, 2010

அங்காடித் தெரு...

கடந்த சனிக் கிழமை , நானும் நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் "அங்காடித் தெரு " திரைப்படம் பார்த்தோம். எங்கே டிக்கெட் கிடைக்காமல் போய் விடுமோ என்று 2 .30 மணி ஷோவிற்கு , 2  மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரில் ஆஜர் ! கிட்டத் தட்ட 10 வது ஆளாக நின்று கொண்டிருந்தேன். கூட்டம் குறைவு தான்! 25 ரூபாய் டிக்கெட்.வாங்கிக் கொண்டு உள்ளே போய் FAN க்கு கீழே இடம் போட்டு உக்காந்தாச்சு !வசந்த பாலனுடைய  'வெயில்' திரைப்படம் எனக்கு பிடித்தமான திரைப் படங்களில் ஒன்று ! ஆனால், அந்த படத்தை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது (?!) , CD யில் பார்த்தது ! அது அறியாத வயசு ! இப்போதெல்லாம் திரைப்படங்களை  ( திருட்டு ) CD யில் பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே ஒரு வித ஆர்வம்  கலந்த எதிர்பார்ப்புடன் தான் படத்திற்கு சென்றேன்.படத்திற்கு அவ்வளவாக விளம்பரம் செய்யப் படவில்லை என்பதால் கூட கூட்டம் குறைவாக இருந்திருக்கக் கூடும் !

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இது ஒரு 'எதார்த்த' சினிமா என்று உணர்த்தி விடுகிறார்கள் . " அது என்னடா ?! ஆ, ஊன்னா எதார்த்த சினிமா , எதார்த்த சினிமா - ன்னு சொல்றீங்க ?!" ன்னு கேட்கிறீர்களா ? ஒண்ணுமில்லைங்க , படத்தில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நடக்க சாத்தியம் இருந்தால் , அதுதான் எதார்த்த சினிமா ! படத்தின் கதாபாத்திரங்களில் ,உங்களையும் , உங்களை சார்ந்தவர்களையும் எளிதாக பொருத்திப் பார்க்க முடிகிறதென்றால் அதுதான்  எதார்த்த சினிமா !!நமக்கு வெறும் செய்திகளாகத் தெரியும் நிகழ்வுகள், அது சார்ந்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அழகாக , மிக அழகாக சொல்லியிருக்கிறார் வசந்த பாலன். கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் மகேஷ் , சரியான தேர்வு. அஞ்சலியும் கூட ! மகேஷின் நண்பன் - மாரிமுத்து வாக நடித்திருப்பவரும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். துணிக் கடையில் SUPERVISOR ஆக வரும் இயக்குனர் A .வெங்கடேஷ் அந்த பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம் ! வாழ்த்துக்கள் !! இது போன்று , கதாபாதிரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்வதிலேயே வெற்றிக்கு பலமான அடித்தளம் போட்டிருக்கிறார் வசந்த பாலன் .படம் நெடுக , சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து ஆச்சர்யமூடுகின்றன !


இசையமைப்பாளர்கள் இருவர் - G .V பிரகாஷ் குமார் மற்றும் விஜய் ஆண்டனி. "அவள்அப்படி ஒன்றும் அழகில்லை " தவிர மற்ற பாடல்கள் எதுவும் படம் பார்ப்பதற்கு  முன்பு தெரியாது . படம் பார்த்த பிறகும் கூட. ஆனால் , எந்த பாடலும் தேவை இல்லாத இடைச்செருகலாக தெரிய வில்லை! ஜெய மோகனின் வசனங்களும் படத்திற்கு ஒரு பலம் தான் ! ஒளிப்பதிவாளரும் வசந்த பாலனுக்கு கை கொடுக்கிறார். கலை இயக்குனருக்கும் பாராட்டுகள் !!படம் பார்ப்பதற்கு முன்பு நண்பனின் கருத்தை கேட்ட போது, "மெகா சீரியல் மாதிரி இருக்குடா " ன்னு சொன்னான் ! எனக்கொன்றும் அப்படித் தோன்ற வில்லை.எனக்கு மெகா சீரியல்கள் பிடிப்பதில்லை , நான் பார்ப்பதுமில்லை !! எனக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கையில் , இன்னுமொன்றை கூட்டியிருக்கிறார் வசந்த பாலன்.

அங்காடித் தெரு - தி.நகர் ரங்கநாதன் தெரு !!

மேலும் விவரங்களுக்கு ,

அங்காடித் தெரு - திரைபடத்தின் இணையதளம் CLICK க்குங்க

5 comments:

 1. உண்மை தான்...!!!
  கதாபாத்திரங்களை கச்சிதமாக தேர்ந்தேடுதிருக்கிறார் வசந்தபாலன்...

  ReplyDelete
 2. உங்களை போன்றவர்களின் வலை தளங்களை பார்த்ததும்
  எனக்கும் ஒன்றை தொடங்கிட ஆசை வந்தது..
  தொடங்கியும் விட்டேன்..

  சின்சியர் பிரண்டு என்ற பெயரில் உங்களுக்கு அறிமுகமானவன்..
  தொடர்பில் இருங்களேன்..

  http://karuthuchidharal.blogspot.com/

  ReplyDelete
 3. @நாடோடித்தோழன்
  நிச்சயம் நண்பரே...
  இனிய வலைப்பதிவு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் !!

  ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி , அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *