IPL க்கும் TPL க்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கும் ?
1 .IPL - வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும்...
TPL - ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ( சில சமயம் அப்பப்ப கூட ! ).
2 . IPL - ஸ்பான்சர் - DLF (இப்போதைக்கு )
TPL - ஸ்பான்சர் - தேர்தல் ஆணையம் ( எப்பவுமே .. !)
3 . IPL - கூட்டணி கிடையாது.
TPL - கூட்டணி உண்டு ( கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது !!! )
4 .IPL - விளையாடுபவர்கள் ஏலம் எடுக்கப் படுவார்கள் .
TPL - பார்வையாளர்கள் (வாக்காளர்கள் (!)) ஏலம் எடுக்கப் படுவார்கள் .
5 . IPL - ஏலத்தொகை கோடிகளில் இருக்கும் .
TPL - ஏலத்தொகை ஆயிரங்களில் இருக்கும் .
6 .IPL - ஒரு வீரரை ஒரு அணிதான் ஏலம் எடுப்பார்கள்.
TPL - ஒரு வாக்காளரை பலர் ஏலம் எடுப்பார்கள் . ஏலத்தொகை எதிரணியினரை பொறுத்து அதிகரிக்கும்.
7 .IPL - நடுவர் சொல்வதை வீரர்கள் கேட்பாளர்கள்.
TPL - கட்சியினர் சொல்வதை நடுவர்கள் கேட்க வேண்டும் !
8 . IPL - 20 ஓவர்கள் .
TPL - 234 தொகுதிகள் .
9 . IPL - மொத்தம் 8 அணிகள்.
TPL - ரெண்டே ரெண்டு முக்கிய அணிகள். எப்போதாவது மூன்றாவது அணி வரும் ! போகும் !!
10 . IPL - ஒவ்வொரு அணிக்கும் ஒரு கேப்டன்.
TPL - மொத்தத்துக்கும் ஒரே கேப்டன் !!
11 .IPL - இறுதியில் ஏதாவது ஒரு அணி ஜெயிக்கும் .
TPL - இறுதியில் மக்கள் அணி மட்டுமே தோற்கும் !!!
நான் ஏதாவது வித்தியாசங்களை தவறி விட்டிருந்தால் , பின்னூட்டத்தில் சொல்லவும்.
சரியான வித்தியாசங்களை சொல்வோருக்கு , பெண்ணாகரத்தில் ஒரு மாதம் தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்துத்தரப்படும் !!
ஐபிஎல் பொறுத்தவரை முடிவுகள் ஆட்டத்தின் முடிவில்...
ReplyDeleteஇடை தேர்தலை பொறுத்தவரை முடிவுகள் ஆளுங்கட்சியின் கைகளில்..
@SincerelyFriend
ReplyDeleteஆனால் இறுதியில் நம் 'விரல்களில்' தான் முடிவு உள்ளது நண்பரே...
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ... மீண்டும் வருக...