Saturday, May 15, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.... 50 வது இடுகை

என்னுடைய 10    மாத கால பதிவுலக வாழ்க்கையில் ( ! ) , இது 50 இடுகை. எப்படியோ GOOGLE புண்ணியத்தில், இலவச வலைத்தளம் ஆரம்பித்து விட்டு, இனி என்னத்தை எழுதப் போகிறோம் என்று முழித்துக் கொண்டு இருந்த நான், என்ன என்னத்தையோ எழுதி இருக்கிறேன். பிரபல பதிவரின் , 50  இடுகையில் பங்கு பெறும் பாக்கியம்  தேடிக் கொள்கிறது  'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் '  ! வாழ்த்துக்கள் !



50 வது இடுகைன்னு நெனச்சி நான் போட்ட 49 இடுகை , '"நான் ஏன் பதிவரானேன்? ".... 49 வது இடுகை ....!' . இதையும் , என்னுடைய முதல் இடுகை -முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).

இதையும் ஒரு முறை படித்து விட்டு வந்துருங்களேன் !


 கடந்த ஞாயிற்றுக் கிழமை செகண்ட் ஷோவிற்கு
அடையார் கணபதிராம் தியேட்டரில் IKMS (IRUMBU KOTTAI MURATTU SINGAM ) படம் பார்க்க போனோம்.மொத்தம் 8 பேர். நான்தான் முதலில் டிக்கட் கவுன்ட்டரில் நின்று கொண்டிருந்தேன்.போகப் போக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. டிக்கெட் கிடைப்பதே கஷ்டம் என்றாகிப்  போனது. நான் வழக்கமாக, எந்த படத்திற்கும் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்க மாட்டேன். இந்த வாரம் இல்லைனா , அடுத்த வாரம் .அவ்வளவுதான் ! ஆனால், என்னையும் நம்பி ,' நீ டிக்கெட் எடுத்து வைடா, நாங்க வந்துகிட்டே இருக்கோம் ' னு சொன்ன , நம்ப பசங்களுக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்.

இனியும், ' காந்தி ' யா இருந்தா டிக்கெட் கிடைக்காது என்பதையறிந்து , ' சுபாஷ் சந்திர போஸ் ' ஆக மாறி ( நன்றி - வல்லரசு மகாராஜன் ) நான் நாலு டிக்கெட்டும் , நண்பன் நாலு டிக்கேட்டுமாக   வாங்கி உள்ளே சென்றமர்ந்தோம் ! எனக்கு , மன்னன் படத்தில் வரும் ரஜினி- கவுண்டமணி சீன் ஞாபகம் வந்தது! நல்ல வேளை , நாங்கள் போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை ! நான் இதுவரை சிம்பு தேவனின் 'இம்சை அரசன் 23 ம் புலிகேசி ' படம் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். 'அறை எண் 305 இல் கடவுள் ' படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.புலிகேசி படம் கூட ஏதோ லொள்ளு சபா பார்த்த பீலிங் தான் கொடுத்தது. ஆனால், லொள்ளு சபா  எனக்கு பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதைப் பார்ப்பதற்காகவே , கல்லூரி  விடுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உள்ள ஒரு மெஸ் க்கு கும்பலாக போவோம்.



முதலில் , கல்பாத்தி S அகோரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! ஒரு புதிய (பழைய ?) முயற்சிக்கு, தாராளமாக முதலீடு செய்திருப்பதே பெரிய விஷயம் தான்! அடுத்து , 'மதராசப் பட்டிணம் ' படம் கூட அவரது தயாரிப்புதான் என நினைக்கிறேன். கல்பாத்திகளுக்கு வாழ்த்துக்கள் ! படத்தின் ஆரம்பத்திலேயே சிம்பு தேவனின் கிளிஷேக்கள் நம்மை வரவேற்கின்றன.படத்தின் ஆகப் பெரும் பலம் , கலை இயக்குனர் தான். செட் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதில் இருந்து, நிகழ் காலத்தின் எந்த ஒரு பாதிப்பும் எங்கும் பட்டு விடாமல் காப்பாற்றியிருக்கிறார். அடுத்து , ஒளிப்பதிவாளர் N .அழகப்பன் அவர்கள்.கலை இயக்குனர் பட்ட கஷ்டத்தை  எல்லாம் , திரையில் கொண்டுவந்து அதற்கான பலனை உண்டாக்கி விடுகிறார். அதுவும், கடைசி அரை மணி நேர காட்சிகளுக்கான காமிரா கோணங்கள் அருமை.

 சின்ன சின்ன நகைச்சுவைகளை தன் பாணியில் கோர்த்து திரைக்கதையை  'பின்னி ' எடுத்திருக்கிறார் சிம்பு தேவன்.சில காட்சிகள், திரை அரங்கமே அதிரும் அளவிற்கு கைத் தட்டல்களை உண்டாக்கி விடுகின்றன. லாரன்ஸ், பத்மப்ரியா, லக்ஷ்மிராய்,சந்தியா,மனோரமா,V .S ராகவன்,M .S பாஸ்கர், நாசர்,இளவரசு,வையாபுரி,மௌலி,சாம், என ஒரு மாபெரும் கூட்டத்தை கொண்டுவந்து , சற்றும் போரடிக்காமல் , கதை சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் சிம்பு தேவன். கௌபாய்களுக்கே உரிய ஸ்டைல் - ஐ கொஞ்சம் கரெக்டாகவே செய்திருக்கிறார்  லாரன்ஸ். அவர் செய்யும் சில 'சாகசங்களுக்கு' நல்ல ரெஸ்பான்ஸ் ! மூன்று கதாநாயகிகளும் , 'வந்தார்கள் ,சென்றார்கள் ' ! படத்தின், முக்கிய கதா பாத்திரம் என்று சொன்னால், அது ,  செவ்விந்தியராக வரும்  MS பாஸ்கர் தாங்க ! மனுஷன் என்னமா, PERFORM பண்ணியிருக்கார் ?! உண்மையில், 'சின்ன பாப்பா , பெரிய பாப்பா ' விலிருந்து நான், MS பாஸ்கரின் ரசிகன். நிகழ் கால அரசியல் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது .



குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை, படத்தின் எந்த பாடல்களும். காட்சிகளை DISTURB பண்ணாமல்  ஒலித்துக் கொண்டிருக்கிறது பின்னணி இசை.அந்த ட்ரைலர் பாடல் ( ஒரு நல்லவன் , ஒரு கேட்டவன் , ஒரு வினோதன் ) சூப்பர் ! ஆனால், அந்த அளவுக்கு படத்தில் இல்லையே ?! ஏன் GV ? சரி விடுங்க, மதராசப் பட்டினத்துல பாத்துக்கலாம்.

SO , IKMS -  சிம்பு தேவன் வெச்ச குறி தப்பாது மாமு !

14 comments:

  1. வாழ்த்துக்கள் 50 க்கு! இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. 50வது இடுகைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துட்டீங்கன்னா ... பின்னூட்டம் போட சுகமா இருக்கும். தமிழில் தட்டச்சு செஞ்சுட்டு, ஆங்கிலத்துக்கு மாறி... அடுத்த பின்னூட்டத்திற்கு திரும்பவும் தமிழில் மாறி... அவ்...அவ்... ரொம்ப போரடிக்குது..

    ReplyDelete
  4. // நான் நாலு டிக்கெட்டும் , நண்பன் நாலு டிக்கேட்டுமாக //

    உங்களுக்கு 4 டிக்கெட்டா... இதெல்லாம் ரொம்ப அதிகம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட் எடுத்தா போதாது...

    ReplyDelete
  5. @SRI
    தங்களின் வருகைக்கும் தருகைக்கும் நன்றி நண்பரே... மீண்டும் வருக....

    @இராகவன் நைஜிரியா...
    //வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துட்டீங்கன்னா ... பின்னூட்டம் போட சுகமா இருக்கும்////
    ஆலோசனைக்கு நன்றி நண்பரே ... கூடிய சீக்கிரம் செய்கிறேன்..

    //உங்களுக்கு 4 டிக்கெட்டா... இதெல்லாம் ரொம்ப அதிகம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட் எடுத்தா போதாது.../////
    ஆஹா... அவரா நீங்கள்... ?!
    ( ' அவனா நீ ?' யின் மரியாதையான 'மொழி மாற்றம் ')....

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பரே இன்னும் நிறைய எழுதுங்கள் சினிமா விமர்சனத்தை விட மற்றவை அதிகமாக எழுதுங்கள்
    அருண் ஜகர்தா

    ReplyDelete
  7. @ Arun...
    மற்றவை பற்றியும் எழுத வேண்டும் ..... எழுதுவேன்..
    தங்களின் மேலான ஆலோசனைக்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. // ( ' அவனா நீ ?' யின் மரியாதையான 'மொழி மாற்றம் ')....//

    அப்படியே கேட்கலாம்... ஏன் என்றால் நான் சிறியவன்... யூத்... யூத்...

    ReplyDelete
  9. @இராகவன் நைஜிரியா......
    //நான் சிறியவன்... யூத்... யூத்...//
    வயதில் சிறியவன்(ர்) என்றாலும் பதிவுலகில் நீ(ங்கள்) எனக்கு தாத்தா தான் :) ;)

    ReplyDelete
  10. @இராகவன் நைஜிரியா......
    வோர்ட் வெரிபிகேசன் தூக்கியாச்சி தல... குறிப்பிட்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  11. வாழ்த்துகள் நண்பா.. சினிமா தவிர்த்து இன்னும் நிறைய எழுதுங்கள்.. சாதனை படைப்பீர்கள்.. மீண்டும் என் வாழ்த்துகள்..:-)))

    @ராகவன் நைஜேரியா

    அண்ணே மனசாட்சியே இல்லாம யூத்துன்னு உங்களை நீங்களே சொல்லிக்கிறதுக்கு என்னொட எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்..:-)))

    ReplyDelete
  12. @கார்த்திகைப் பாண்டியன்...
    தங்களின் மேலான ஆலோசனைக்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே... மீண்டும் வருக...
    //அண்ணே மனசாட்சியே இல்லாம யூத்துன்னு உங்களை நீங்களே சொல்லிக்கிறதுக்கு என்னொட எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்..:-))) ///
    இதை நான் வழி மொழிகிறேன்... :)

    ReplyDelete
  13. Vazthukal Sankar.. Un Kooda 4 varusam irundhatha nenacha romba perumaiya iruku !!! Anyways appave enaku theriyum nee edhavathu panuvenu !!! Kada Kala Katiruchu pola !!! Neraya Vaasagargal Vanthutaanga Pola !!! Anyways naan than 3 rd follower of ur blog !!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...