Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதை

ஒவ்வொரு இரவும் பணிமுடித்து காலத் தாமதமாக வீடு திரும்புவது என்பது எங்கள் வேலைக்கே உள்ள 'சிறப்பம்சம்'. ஆம், நான் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

சிலநாட்கள், 10 மணி,சிலநாட்கள் 12 மணி.அல்லது அடுத்தநாள் காலை 3 அல்லது 4 மணி. பெண்கள் என்றால், CAB ஏற்பாடு செய்து விடுவார்கள்.எனக்கு , சொந்தமாக ஒரு BIKE உண்டு. ஊரில் அப்பா வாங்கி வைத்திருந்தது. அதை நான் எடுத்துக் கொண்டு , அவருக்கு ஒரு புது TVS 50 வாங்கிக் கொடுத்து விட்டேன். வயசாகி விட்டதால், GEAR வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.


இரவு தாமதமாக வந்தாலும், TRAFFIC போலீஸ் எங்களை எதுவும் கேட்க மாட்டார்கள். அதிகாலை 3 மணி ஆனாலும், சட்டையை IN பண்ணிக் கொண்டும், ID CARD ஐ, வெளியில் தெரியும் படி  மாட்டிக் கொண்டு வருவோம். அவர்களும் கணித்து விடுவார்கள். சிலசமயம் 100 - 200 கொடுப்பதுண்டு.

மெயின் ரோட்டில் வரும்போதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. உள்ளே தெருவில் நுழைந்து விட்டால், 'அவர்களின்' ஆட்டம் ஆரம்பமாகிவிடும். கூட்டமாக நின்று கொண்டு வருவோர் போவோரை மிரட்டிக்  கொண்டு  இருப்பார்கள். பெண்கள் CAB இல் சென்று விடுவதால் பிரச்சினை இல்லை.கூடவே SECURITY GAURD வேறு இருப்பார்கள்.என்னைப் போன்ற மென்பொருள் 'இளைஞர்களுக்கு' தான் கஷ்டம்.


கொஞ்சம் தைரிய சாலியாக இருந்தால் , நின்று  முறைத்துப் பார்க்கலாம். அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள்.அல்லது நாம் கூட்டமாக இருக்க வேண்டும்.அப்போது அவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். ஒருத்தன் சவுண்டு கொடுத்தால் போதும், சுத்தி இருக்கிற எல்லாரும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா ?



இவர்களால் எத்தனை பேர் ACCIDENT ஆகியிருக்கிறார்கள் ?! எத்தனை மரணங்கள் ?! எத்தனை காயங்கள் ?! ஏன் இப்படி ?! இனியும் பொறுத்திருக்கக் கூடாது.திருப்பி அடிக்க வேண்டும்.

ஆஹா, இன்றும் லேட் ஆகிவிட்டதே ?!
பயம் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும், துரத்திக் கொண்டே வருவார்களே ?! "இன்றோடு நான் பயந்து ஓடுவது கடைசியாக இருக்க வேண்டும்" , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். HELMET போட்டுக் கொண்டு வண்டி ஓட்டினால், அவர்களின் கோபம் இன்னும் அதிகமாகி விடும்.

நாளை காலை முதல் வேலையாக இதைப் பற்றி புகார் சொல்லியாக வேண்டும். அல்லது அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் செய்தியாவது அனுப்ப வேண்டும். நல்ல வேலை இன்று வெள்ளிக் கிழமை. நாளை ஆபீஸ் கிடையாது. இதுதான்  தக்க சமயம்.ACT NOW !

"என் சமூகத்திற்கு நான்" செய்யும் சிறு அல்லது பேரு உதவி இதுவாக இருக்கக் கூடும்!

சனிக்கிழமை காலை 11 மணி.
என் மொபைல் போனில் இருந்து சுழற்றினேன் - அல்லது கால் செய்தேன்.
1913 

"ஹலோ , சென்னை கார்பொரேசன் ?! நான் இங்க அடையார்ல இருந்து பேசறேன். தெரு நாய்கள் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணனும் ! ஒரே டார்ச்சரா இருக்கு சார் ! கொஞ்சம் CONNECT பண்றீங்களா ?!"



(நன்றி - கதைத்  தலைப்பு உதவி - கவுதம் வாசுதேவ மேனன் , புகைப்பட உதவி - www.tamilvix.com, http://www.flickr.com/photos/kxp130/229446264/)


Saturday, February 12, 2011

கொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் ?!


தலைவர் டிவி பார்த்து ரொம்ப கேட்டுப் போயிட்டாரா ?! ஏன் ?!
ஆமா, 'ஊழல் பண்ணுறதால நல்லது நடந்தா, ஊழல் நல்லது தானே?! ' ன்னு கேக்குறார் !


####################################################################################


தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்!
ஏன் அப்புடி சொல்ற ?!
'தேர்தல் ஆணையத்தோட கூட்டணி வெச்சா சுலபமா ஜெயிக்கலாமே' ன்னு சொல்றார் !


####################################################################################


இந்த தேர்தல்ல எந்த கட்சியுமே ஜெயிக்காதா ?! ஏன் ?!
ஆமா, பின்ன என்ன ?! எல்லாருமே 'மக்களுக்கு நல்லது பண்ற கட்சிக்கு ஒட்டு போடுங்க' ன்னு சொல்றாங்களே ?!


####################################################################################


தலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார் ?!
எலெக்சன் டெபாசிட் கட்ட போகும்போது, அவுங்க வீட்டம்மா 'எதுக்குங்க இவ்ளோ பணத்த வேஸ்ட் பண்றீங்க' ன்னு கேட்டாங்களாம் !


####################################################################################

தலைவர் ரொம்ப முன்னேறிட்டார் !
எப்புடி ?!
எதிர்கட்சித் தலைவர், தேர்தல் அறிக்கையில "வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு சொன்னதும், இவர் "ஓட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு அறிக்கை விடறாரே !


####################################################################################



(படம் நானே வரைஞ்சதாக்கும் !)

18 வயது வந்த உடன் ஒரு ஓட்டு போட அனுமதிக்கும் தேர்தல் ஆணையமே ,நான் கேட்கிறேன் , 36 வயது வந்த உடன்  இரண்டு ஓட்டு போட அனுமதிக்காதது ஏன் ?


####################################################################################

Wednesday, January 26, 2011

2075 - ஒரு பிளாஷ் பேக் [சயின்ஸ் பிக்சன் தொடர் கதை(யாமாம் !) ] - 1


டிஸ்கி : இந்த 'தொடர்கதை' (!) யில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் கற்பனையே.நான் படித்த கதைகளின், பார்த்த கேட்ட கதைகளின் பாதிப்புகள் இருக்கக் கூடும்.

============================================================================== 

"கிஷோர், சொன்ன மாதிரியே "SITISAN" டைம் மெசின் தானே வாங்கிட்டு வந்துருக்க ? அப்புறம் போன தடவ மாதிரி பாதி வழியிலயே நின்னுடுச்சுன்னா ரொம்ப கஷ்டமா போயிடும் !"

"ஆமாம்ப்பா, "SITISAN" மெசின் தான் வாங்கியிருக்கேன் ! வேலிடிட்டி 150 வருஷம். பழைய மாதிரியே , முன்னாடி 75 வருஷம் பின்னாடி 75 வருஷம். எந்த பிரச்சினையும் வராதுன்னு பெடரிக் மாமா சொன்னாரு. அவர் போன டைம் வாங்கினது 500  வருஷம் வேலிடிட்டி உள்ளது.ஆனா கொஞ்சம் காஸ்ட்லி. 2300 ரூபாயாம். நம்மது 870 ருபீஸ்தான்."

                                                  (படம் நானே வரைஞ்சதாக்கும் !)


"ஜெனி , எலாம் எடுத்து வெச்சிட்டியா ? எதுக்கும் ஒரு தடவ நல்லா செக் பண்ணிக்கோ. இந்தமுறை கொஞ்சம் லாங் ட்ரிப் தான் ப்ளான் பண்ணியிருக்கேன். முதல்ல 2075  வரை போறோம். முடிஞ்சா அங்க போயிட்டு வேலிடிட்டி EXTEND  பண்ணிக்கலாம். டிரைவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்."

கிரியும் , ஜெனியும் லவ் மேரேஜ். கிஷோர், மாகி என இரண்டு குழந்தைகள்.கிஷோர் - UKG , மாகி - PREKG.  ரொம்பா நாளா நச்சரிச்சு தான் இந்த TRIP க்கு கிரி சம்மதம் சொன்னான்.

"ஏன் கிரி, பாஸ் கிட்ட சொல்லிட்டுதானே எங்க கூட வர ?! அப்புறம் கிளம்புற நேரத்துல பாஸ் கூப்பிடுறார், கீஸ் கூப்பிடுறார்னு கத சொல்லிகிட்டிருக்காதே. "

"இல்ல ஜெனி, சொல்லிட்டுதான் வரேன். நீ ஒன்னும் கவலைப் படாதே !அவர் அடுத்த வருஷம்  போறதுக்கு பிளான் பண்ணியிருக்கார் ! அதான் ஒன்னும் சொல்லாம, SIGN பண்ணி கொடுத்திட்டார் !"

26  ஜனவரி , 2150 .
காலை 11 மணி 20 நிமிடம்.
இன்னும் 30 நிமிடம் 15 நொடி  120 MICRO நொடிகளில் மெசின் கிளம்பி விடும்.
அதற்கான ஆயத்த பணிகளில் இருந்தார் டிரைவர்.


"சார், ரூல்ஸ் எல்லாம் தெரியும்ல ?! பசங்களுக்கு நல்ல சொல்லிடுங்க. நான் CABIN குள்ள போயிட்டா , திரும்ப ரிடர்ன் வந்துதான் வெளிய வருவேன். மொதல்ல எங்க போறோம் ? 2075 க்கா, இல்ல 2225 க்கா ?! ஆனா, எப்புடி போனாலும் மொத்தம் 24 எடத்துல தான் எறங்க முடியும்."


"கிஷோர் , மாகி நல்ல கேட்டுக்குங்க..."

"அப்பா, ஒரே BORE  ! எத்தன தடவ இதையே திரும்ப திரும்ப சொல்லுவ ?!" மாகி கொஞ்சம் கோவமாகத்தான் கேட்டாள்.

"அது சரி மாகி, இதுதான் லாஸ்ட்டு . டிரைவர் UNCLE சொல்றாருல்ல ?!"

1 . வழில யாரு என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது.
2 . நைட் டைம்ல  மெசின் - ஐ விட்டு எறங்க கூடாது.
3 . பகல்ல இறங்கினாலும், 33 நிமிசத்துல திரும்ப உள்ள வந்துடனும்.
4 . ......

ரூல்செல்லாம் சொல்லி முடித்த பிறகு, சரியான நேரத்திற்கு, தன் இறக்கைகளை விரித்த படி கிளம்பியது  "SITISAN " TIME MACHINE  !

"டிரைவர் சார், முதல்ல 2075 க்கு போங்க" தான் மாட்டியிருக்கும் HEADPHONE இல் கிஷோர் சொல்ல, ஜெனி, கிஷோர், மாகி மூவரும் ஆர்வமானார்கள் !

- தொடரும்.

Saturday, January 8, 2011

அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !

"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !

                                         நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com

அப்படியென்றால் ?! ஆம், அதேதான் ! அதிமுக + தேமுதிக !
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !

'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !

ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !

                                       நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com

இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !

ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !

Saturday, January 1, 2011

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 2

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !


=================================================================================
"அந்த ஹோட்டல்ல, 'இன்றைய ஸ்பெசல்' னு போட்டு , 'காமன் வெல்த் தோசை , ஸ்பெக்ட்ரம் தோசை' ன்னு போட்டிருக்காங்களே ?! அப்படின்னா என்ன சார் ?!"

"காமன் வெல்த் தோசைன்னா 4 பேர் சாப்பிடலாம் , ஸ்பெக்ட்ரம் தோசைன்னா 40 பேர் சாப்பிடலாம் !"

"அங்க கேத்தன் தேசாய் தோசை கிடைக்குமா ?!"

"அது என்ன தோசை சார் ?!"

"நான் ஒருத்தன் மட்டும் தான் சாப்பிடப் போறேன் !"

                              நன்றி - புகைப்பட உதவி : http://www.commonwealthgame2010.com/
=================================================================================
"தலைவர் ஏன் ரொம்ப கோவமா இருக்கார் ?!"

"அவங்க வீட்டுக் காரம்மா வந்து, 'ஏங்க , 3G ஸ்பெக்ட்ரம் எப்போ  ஏலம் விடுவீங்க' ன்னு கேட்டுட்டுப் போறாங்க !"

=================================================================================
  "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"


" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!" 

'அதுக்கு இளவரசர் என்ன சொன்னார் ?!'

" 'அது என்ன அவ்ளோ காஸ்ட்லியா தந்தையே ?!' ன்னு கேட்கிறார்  ''

                                       நன்றி - புகைப்பட உதவி : http://www.freshplaza.com

=================================================================================
 "தலைவர்கிட்ட , 'குழந்தைக்கு, வாயில வர்ற மாதிரி பெரு வைங்க ' ன்னு சொன்னது தப்பாப் போச்சு !"

"ஏன் ?! என்ன ஆச்சு ?!"

" 'ஸ்பெக்ட்ரம்' னு பேர் வெச்சுட்டார். கேட்டா , 'இப்போ அதுதான் எல்லோர் வாயிலையும் வர்ற வார்த்தை  ' னு  சொல்றார் !"

=================================================================================
"தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார் !" 

"ஏன் அப்படி சொல்றே ?!"

"எதிர்க் கட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போல , தனக்கு 'இன்ஜினியர்' பட்டம் கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுறார் ! "

=================================================================================

Friday, December 24, 2010

நேயர்கள் இனி கேட்கலாம்... செய்திச் சுருக்கம் !

எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
வானொலியுடனான எனது நட்பை குறித்த இடுகை இது.


                             நன்றி - புகைப்பட உதவி: www.abagond.wordpress.com

பால்யத்தில், அடிக்கடி தஞ்சாவூருக்கு எங்கள் தாத்தாவைப் பார்க்க போவதுண்டு. 75 - 80 வயது இருக்கும் அவருக்கு.எப்போதும் கையில் ஒரு TRANSISTOR வைத்திருப்பார். மெதுவாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த TRANSISTOR  தான் அவரின் பெரும்பாலான நேரங்களில் துணையாக இருக்கும் - பாட்டி இறந்த பின்பு !கூடவே ஒரு பெரிய ரேடியோவும் வைத்திருப்பார். செய்திகள் வரும் நேரங்களில் ,அதனை TUNE செய்வது தான் "சக" பேரப்பிள்ளைகளின் வேலை. எல்லா அலைவரிசைகளிலும் எந்தெந்த நேரங்களில் செய்திகள் வரும் என்பதை மனப் பாடமாக தெரிந்து வைத்திருந்தார் .




                                           நன்றி - புகைப்பட உதவி  : www.jamthechannel.com


அதனை கேட்டுக் கொண்டே தூங்கியும் விடுவார். "சரி தூங்கி விட்டாரே" , என்றெண்ணி ரேடியோவை OFF செய்தால், உடனே விழித்துக் கொள்வார் ! பல முதியவர்களின் உற்ற தோழனாய் இருந்து கொண்டிருந்தது வானொலிதான். அதனுடனான நெருக்கத்தை, அவர்கள் தொலைக் காட்சியுடன் கொண்டிருக்கவில்லை !


என் சிறுவயதில், வானொலியில் திரைப் படங்களை வசனத் தொகுப்பாக  ஒலி பரப்புவார்கள்.இப்போதும், "தெய்வ மகன்" படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம், அதன் வசனத் தொகுப்பைக் கேட்ட அந்த மாலைப் பொழுது , மனதில் மீள் பதிவாகிறது ! இப்போதெல்லாம் , வானொலி என்றாலே FM ஞாபகம் தான் வருகிறது !கொஞ்ச நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


                                           நன்றி - புகைப்பட உதவி : www.blog.emman.in

சென்னை வந்த புதிதில் , FM கேட்பது என்பது புதிய அனுபவத்தைக் தரக்  கூடியதாய் இருந்தது. அப்போதெல்லாம் , தனியார் நிறுவன FM களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அரசு வானொலியின் ஒரு பிரிவான FM ரெயின்போ 101 .4 தான் எனது விருப்பம் ! தொகுப்பாளர்கள் , ஏதோ நம் அண்டை வீட்டுக் காரர்கள்  போல் உணரவைக்கிறார்கள் ! மணிக்கொரு முறை செய்திச் சுருக்கம் , அடிக்கடி பழைய பாடல்கள் என நெருக்கமாயிருக்கிறது ! 105 .6 பண்பலை, மாலை நேரங்களில் நல்ல நாடகங்களை ஒளிபரப்புகிறார்கள் . 102 .3 FM கோல்டில் , விரிவான செய்திகள் கேட்கலாம். பணி முடிந்து, கூட்டமில்லா மாநகரப் பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்தால், அந்த பயணத்தில் நிச்சய தோழன் 101.4 FM ரெயின்போ தான் !


காலப் போக்கில் , "MODERN ஆக்குகிறேன்" என்ற பெயரில் இது போன்ற வானொலி சேவைகளின் பழமையை மாற்றாமலிருக்க வேண்டும் ! எங்கள் வீட்டில் பழைய CASSET கள் நிறைய உண்டு ! ஆனால், 'பல' முறை பழுது பார்த்தும் , மீண்டும் மீண்டும் பழுதாகிக் கொண்டேஇருந்தது ! சரி ஒரு புது TAPE ரெகார்டர் வாங்கலாமென்று, ஒரு 15 கடைகளில் ஏறி இறங்கியிருப்பேன்  ! எங்குமே கிடைக்கவில்லை !

                                              நன்றி - புகைப்பட உதவி: www.sony.lv


ஒருமுறை, என்  தந்தை, "உங்களைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் , ஏதாவது வாங்கி வர வேண்டுமா" என்று தாத்தாவை கேட்டதற்கு - "ஒரு TRANSISTOR  மட்டும் வாங்கிட்டு வாடா !" என்றார். சில வருடங்களில் தாத்தா  இறந்தும் விட்டார் ! அவர் வைத்திருந்த இரண்டு TRANSISTOR களும், ஒரு பெரிய ரேடியோவும் பழுதாகிப் போயிருந்தன ! இப்போது அந்த வீட்டில் யாரும் வானொலி கேட்பதில்லை. அதனைப் பழுது பார்க்க, யாரும் விரும்புவதுமில்லை, யாருக்கும் நேரமுமில்லை ! ஆனால், வானொலியானது, தன் அலைகளை காற்றில் பறக்கவிட்ட படியேதானிருக்கிறது , அதனைக் கேட்பவர்கள்தான் குறைந்து விட்டார்கள் !

Saturday, December 18, 2010

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 1

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !
 
இந்தியாவில் இப்போதைய "ஹாட்" டாபிக் - ஸ்பெக்ட்ரம் தான் ! இது போன்றதொரு 'நிகழ்வு' மன்னர் (இராஜ ராஜ சோழன் அல்ல !) காலத்தில் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவே இவ்விடுகை !

                                         நன்றி - புகைப்பட உதவி : www.serpholicmedia.com

ஆனால் அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் இல்லையே ?! அது இல்லாட்டி என்ன , எப்படியும் தூது விட புறா வாங்கித் தானே ஆகணும் ?!

=====================================================================================

"மந்திரி தான் புறா விற்றதில் எந்த ஊழலும் நடக்க வில்லை என்கிறாரா ?"

"ஆமாம், தான் செய்த அனைத்தும் மன்னருக்கு தெரிவித்து விட்டுதான் செய்ததாக சொல்கிறார் !"

=====================================================================================

"மந்திரி , தன் பதவியை இராஜினாமா செய்து விட்டாராமே ?!"

"ஆமாம் ."

"ஆனால், கடந்த மாதம் , தான் ஊழலே செய்ய வில்லை என்று சொன்னாரே ?!"

"ம்ம்... கேட்டால், 'அது போனா மாசம், இது இந்த மாசம் ' என்கிறார் !"

=====================================================================================

புறா விற்றதில் , இதற்கு முன்னாள் இருந்த மந்திரிகள் என்ன வழிமுறைகள் பின்பற்றினார்களோ , அந்த வழி முறைகளைத்தான் நானும் பின் பற்றினேன் என்பதை அவையோருக்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் !

=====================================================================================

                                    நன்றி - புகைப்பட உதவி :  http://oratorgreat.blogspot.com/

" மன்னர் ஏன் திடீரென்று செல் போன் கனெக்ஷனை துண்டித்து விட்டு, 200 தீப்பெட்டிகளும், நூலும் ஆர்டர் செய்துள்ளார் ?! "

"செல் போனில் பேசினால் ஒட்டுக் கேட்கிறார்களாம் ! அதனால், இனிமேல் தீப்பெட்டித் தொலை பேசி மூலம் தான் பேசுவாராம் !"

 =====================================================================================
 "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"

" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!"

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...