Saturday, November 19, 2011

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் விரைவில் இடமாற்றம் ?!

முன் குறிப்பு : முழுவதும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல!


நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் சாராம்சம் :
கிண்டி கத்திப்பாராவில் செயல் பட்டு வரும், பெரிய மேம்பாலம் விரைவில் இட மாற்றம் செய்யப் பட உள்ளது. புதிய கத்திப்பாரா மேம்பாலம் , சென்னைக்கு மிக அருகில் உள்ள திண்டிவனத்திற்கு மாற்றம் செய்யப் படுகிறது.( சென்னையில் இருந்து, திண்டிவனத்திற்கு அடிக்கடி பருந்து வசதி உள்ளது !). தற்போது உள்ள மேம்பாலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான 'சறுக்கல்' ஆக, மாற்றம் செய்யப் படும். இதன் மூலம், இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கில், தமிழகம் முன்னோடியாகத் திகழும்.


                         நன்றி - புகைப்பட உதவி : www.picasaweb.google.com

டிஸ்கி : சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்கிற அறிவிப்பின் 'பாதிப்பு' தான் இந்த பதிவு.

==========================================================================

இருக்கிற மருத்துவமனைகளின் நிலைமையை சீராக்கினாலே, தமிழகம் குழந்தைகள்  நலனில் மட்டுமல்ல, அனைவரின் நலனிலும் முன்னோடியாகத் திகழும் என்பதே என் எண்ணம்.அதை விடுத்து, 'இத அங்கவை , அத இங்கவை ' என்று 'மாற்று அரசியல்'  செய்வதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
எதற்கும் இடமாற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை பார்த்து விடலாம் என்று கடந்த வாரம் நானும், நண்பனும் போயிருந்தோம்.



                       நன்றி - புகைப்பட உதவி - www.annacentenarylibrary.blogspot.com 

ஒரு அரசு நூலகத்திற்கான எந்த ஒரு 'அறிகுறியும்' இன்றி, அட்டகாசமாக இருந்தது. ஒவ்வொரு தளமாக சுற்றிப்பார்க்கவே நான்கு மணி நேரம் ஆகிற்று.
மேலும் அங்கிருந்த வருகையர் பதிவேட்டில், எல்லாரும் நூலக மாற்றம் தேவையற்றது என்றுதான் எழுதியிருந்தார்கள். அத்துணை பெரும் திமுக வைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவுதானே ?! ஒருவர் எழுதியிருந்தது, "நாங்கள் விரும்பியது ஆட்சி மாற்றம் தான் - நூலக மாற்றம் இல்லை " !


சட்டப் பேரவையை இடமாற்றம் செவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. (அது சரியா தவறா என்பது வேறு விஷயம் !) . நீங்கள் அங்கு போவீர்கள், வருவீர்கள். நூலகத்திற்கு நீங்கள் வருவது சாத்தியமா என்ன ?! இருந்துவிட்டுத்தான் போகட்டுமே ?!



Wednesday, August 31, 2011

அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்கு தீர்வு இதோ ! (நகைச்சுவைக்காக மட்டும் !)

 டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும்.

அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே.. அது போல அமெரிக்காவில் பொருளாதார பிரச்சினை வந்தால், உலகம் முழுவதும் திகிலடிக்கிறது. லோன் போட யோசிக்க வேண்டியிருக்கிறது. டீலக்ஸ் BUS ஐ, விட்டு விட்டு LSS BUS க்காக காத்திருக்கிறார்கள்.  அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் IT ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்ன வாழ்க்கைடா இது என்கிறார்கள்.



எதுக்கு இவ்வளவு கஷ்டம் ?!

இத்தனைக்கும்  நாம் பதிவெழுதும் இந்த தளம் ஒரு அமெரிக்க கம்பெனி தானே நமக்கு கொடுத்தது ?! ஒரு நன்றிக் கடனாக , அமெரிக்க கடன் பிரச்சினைக்கு தீர்வு  சொல்வது நம் கடமை இல்லையா ?

 இதோ, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்கு கடன் பிரச்சினை இருந்தாலும் , அதற்கு ஓர் அருமருந்து ! 



நன்றி புகைப்பட உதவி :
http://www.financialfacts.org/wading-through-the-recession-tips-and-advice/
http://allkavach.com/products-shri-dhan-laxmi-yantra-23.aspx

ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் !


 அமெரிக்க பதிவர்கள் யாராவது வாங்கி, வெள்ளை மாளிகையில் கொடுங்களேன் !

உடனே சமஸ்தானத்திற்கு போன் செய்யவும் !



Sunday, May 22, 2011

கனவுக் கவிதை (யாமாம் !)...

 கனவுக் கவிதை (யாமாம் !)



நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...

ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து 
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...

ஒரு தாய் பென்குயின் , 
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...

பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க, 
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...

ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...

தங்கள் வீட்டு காம்பவுண்டில், 
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...

குழம்பு சோறு முடித்துவிட்டு, 
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது,
"வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...





டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.

Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)




                      நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html


அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,
வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,
எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!


===========================================================================


                    நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net


அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட,  நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !



Tuesday, May 3, 2011

உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
   
                                      நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in

நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.



























கதை அவ்வளவுதான் ! 


"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 










நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !

=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !



Saturday, March 26, 2011

2016 - தேர்தல் அறிக்கை இதோ... (பதிவர்களுக்கு பரிசு மழை !)

நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கும் நம்ம அரசியல் கட்சிகளுக்கு, நாம ஏதாவது செஞ்சிருக்கோமா ?! ன்னு யோசிச்சு பார்த்தப்ப தான், சரி இந்த தேர்தலை விட்டுடுவோம். வரப்போற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு , நானே ஒரு அறிக்கை தயார் பண்ணி குடுக்கலாம்னு ! நம்மாலான சிறு உதவி !

( முழுவதும் நகைச்சுவைக்காகவே ! யார் மனதையும் புண்படுத்த அல்ல ! )


# ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு  60 இலவச மதிப்பெண்கள் வழங்கப்படும்.

# ஒரு ஓட்டுனர், ஒரே வழித்தடத்தில் 10 வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை ஓட்டியிருந்தால், அந்த பேருந்தை அவரே வைத்துக் கொள்ளலாம். ( உபயம் - உடன் பணி புரியும் நண்பர் )

# ஒரு குடும்பம் 5 வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அந்த வீடு அவர்களுக்கே வழங்கப் படும் (நாமளும் எவ்ளோ நாள்தான் வாடகை வீட்லயே இருக்கிறது ?!). வீட்டு ஓனர் விருப்பப்பட்டால்  , 15 லட்ச ரூபாய்  (வாடகை தாரருக்கு ! ) செலுத்தி அந்த வீட்டைத் திரும்பப் பெறலாம்.

# ஒரு பதிவர் நூறு பதிவுகளுக்கு மேல் எழுதி, ஒன்றுமே பரவலாக பேசப் படவில்லை என்றால், ரூபாய் . 50 மட்டும் செலுத்தினால்  போதும் - தெருவுக்குத் தெரு அவரின் பதிவுகள் போஸ்டர் அடித்து ஒட்டப் படும். போஸ்டர் செலவை அரசே ஏற்கும். 100 ரூபாய் செலுத்தினால், தொலைக் காட்சிகளிலும் , திரை அரங்கங்களிலும் காண்பிக்கப் படும்.

# தெருவிற்கு ஒரு 'அரசு ATM மெசின்' நிறுவப் படும். பொது மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை SWIPE செய்து, மாதம் ருபாய் 10000 பெற்றுக் கொள்ளலாம்.

 நன்றி - புகைப்பட உதவி : http://www.travel247.tv/india/tourist-guide/indian-money

# பொது மக்களின் பொழுது போக்கிற்காக, அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஒரு கடற்கரை ஏற்படுத்தப் படும்.அவை , திங்கள் - முதல் வெள்ளி வரை காலை 4 மணிமுதல் இரவு 2 மணி வரை யும், ஞாயிற்றுக்க் கிழமைகளில், 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

# ஒருவர், ரயில் பயணத்தை  முடித்து விட்டு , அவருடைய பயணசீட்டை காட்டினால், பயணக் கட்டணத்தின் இரண்டு மடங்கு பணம் இலவசமாக வழங்கப் படும்.

# டெல்லியில் இருந்து நமக்கு வரவேடிய அதிகாரங்களை , நடுவில் இருக்கிற மாநிலங்கள் பிரித்துக் கொள்வதால், தமிழகத்தை டெல்லிக்குப் பக்கத்தில் மாற்றுவதற்கோ , அல்லது டெல்லியை தமிழகத்திற்கு பக்கத்தில் மாற்றுவதற்கோ முயற்சி மேற்கொள்ளப் படும் ( உபயம் - வடிவேலு காமெடி ).

# எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காள நண்பர்களே , நீங்கள் ஒவ்வொருவரும், தலா இரண்டு ஓட்டுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப் படும்.


                        நன்றி - புகைப்பட உதவி :http://www.secwhistleblowerprogram.org

# இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, (உதாரணத்திற்கு) உங்கள்  வீட்டில் இரண்டு குழந்தைகள் 10 , மற்றும் 8 வயதுகளில் இருப்பார்களே யானால், அவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஓட்டாக கணக்கில் கொள்ளப் படும்.


(இந்த தேர்தல் அறிக்கைக்கு  காப்புரிமை பெறலாமென்று இருக்கிறேன் ! 2016  இல்  நல்ல விலை போக வாய்ப்பிருக்கிறது !)



Saturday, March 19, 2011

எலெக்சன்னா உங்களுக்கு என்ன அவ்வளவு காமெடியா போச்சா ?!

நம்ம தேர்தல் அறிக்கைதான் நாம தோக்கறதுக்கு காரணமா இருக்கப் போகுது !
ஏன் அப்புடி சொல்ற ?!
பின்ன என்ன, தலைவர் - 'நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு சின்ன வீடு தருவோம்' னு தேர்தல் அறிக்கை வெளியிடறார் !

#####################################################################################

'அன்பான வாக்காளர் பெருமக்களே , மாற்றுக் கட்சி வேட்பாளர் மொத்தம் ஆறு கொலைகள் செய்திருக்கிறார் ! ஆனால், எங்கள் கட்சியின் வேட்பாளர் வெறும் இரண்டு கொலைகள் மட்டுமே செய்திருக்கிறார்! ஆகவே நீங்களே சிந்தித்துப் பாருங்கள் , இருவரில் யார் நல்லவர் என்று !'


நன்றி - புகைப்பட உதவி : http://www.intell.rtaf.mi.th/newsdetail.asp?id=51010


#####################################################################################
 
தலைவர்க்கு இருந்தாலும் இவ்வளவு அவசரம் கூடாது!
ஏன் என்ன ஆச்சு ?!
தமிழ்நாட்டு சட்டசபைக்கு மொத்தம் 330 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை  அறிவிச்சுட்டார் !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...