Saturday, January 2, 2010

வேட்டைக் காரன்




இந்த புது வருடத்தை , ஒரு நல்ல படத்துடன் தொடங்கிய திருப்தியில் (அட , நெஜம்மாத்தாங்க !!) , ' வேட்டைக் காரன் ' விமர்சனத்தை எழுதுகிறேன் .

விஜய்யை பற்றியும் , வேட்டைக்காரன் பற்றியும் எக்கச் சக்கமாக , சர்தார்ஜி ரேஞ்சுக்கு எஸ்.எம்.எஸ் களும், மின்னஞ்சல்களும் ( நான் இப்போதெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளை ரசிப்பதில்லை ) வந்தாலும், படத்தை தியேட்டரில் தான் பார்ப்பது என்று முடிவு செய்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருவான்மியூர் தியாகராஜாவில் நேற்று இரவு ' வேட்டைக் காரன் ' பார்த்தேன்.

ஏற்கனவே ஹிட் - ஆன பாடல்கள் படத்திற்கு பெரும் பலம் ( உபயம் - சன் தொலைக்காட்சி குழுமம் மற்றும் விஜய் ஆண்டனி ) . ஏற்கனவே தொடர்த் தோல்விகளால் ( குருவி , வில்லு ) துவண்டு போயிருந்த இளைய தளபதிக்கும், அவர் ரசிகர்களுக்கும் சற்று ஆறுதல் தரக் கூடிய படம் இது. விஜயின் அரசியல் பிரவேசம் இந்த படத்தின் மூலம் தெளிவாகிவிடும் என்று நினைத்தவர்களுக்கு, படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியவுடன் சூட்சுமம் புரிந்திருக்கும்.

தீபாவளிக்கு வரவண்டிய படமிது. தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக( ! ) டிசம்பரில்தான் வெளியிட முடிந்தது.

செல்லாவாக வரும் வில்லன் , தமிழுக்கு ஒரு நல்ல அறிமுகம் . வேத நாயகமாக வருவது , அட , நம்ம சக்கரக் கவுண்டர் ! அனுஷ்காவுக்கு, பாடல்களில் மட்டும் திறமைக்கு சவால். முதல் பாதியில் காதலும், காமெடியுமாக கலக்கும் விஜய், இரண்டாம் பாதியில், ஆக்சனில் வெளுத்து வாங்குகிறார். படத்தில், ஆங்காங்கே சில தர்க்க ( லாஜிக் ) குறைபாடுகள் இருந்தாலும், வேகமான திரைக்கதை அந்த குறைகளை பூர்த்தி செய்து விடுகின்றது.

சரி , விமர்சனத்தின் இறுதியில், படத்தின் பெயரை பயன் படுத்தி ஒரு பன்ச் வைக்க வேண்டும் என்று , விதி ஒன்றும் இல்லையே ?!

---------------------------------------------------------------------------------------------
கீழே உள்ள படங்களில் வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுங்கள் . (ஆங்கிலத்தில் சொன்னால் , ' ஆட் மேன் அவுட் ! )

>> குருவி ,
>> வில்லு ,
>> வேட்டைக் காரன்.

---------------------------------------------------------------------------------------------

மேலே உள்ள கேள்விக்கு என்னுடைய பதில், " வேட்டைக் காரன் " !

6 comments:

  1. vettaikaran film nalla irukunu sonna orey aal nee than sankar.. naan innum padam parkala. but rnoda roommates 3 per vijay fans.avangale padatha parthu veruthu vandhanga.. same masala story...ellam kalantha kalavai. batsha,sivakasi,shahjahan ipadi pala padangalin kalavai than indha vetaikaran. idhula aachariya pada koodiya visayam enna na inga hyderabadla orey oru theatrela matum than tamil padam varum. adhuvum orey oru show than odum. vandhu 2 weeksla padatha thookiruvaanga. aana indha vetaikaran padam release agi 3 varam agiyum padatha innum thookala. inoru vishayam ennana indha padam oru naalaiku rendu show oduthu.

    ReplyDelete
  2. UNAKU KUSUMBU ATHIGAM MAPPU!! NANGALAM SOLLIYUM NE POI ANTHA PADATHA PATHIRKA PARU.UN THAIRYAM ENNAKU PIDICHURUKU VARATUMA...

    ReplyDelete
  3. @ ஹக்கீம்...
    படம் பார்க்கும் போது, எனக்கு எந்த இடத்திலும் ' போர்' அடிக்கவில்லை.
    வருகைக்கும், மறுமொழிக்கும் ( கமென்ட்) நன்றி.
    மீண்டும் வருக !!

    ReplyDelete
  4. @ கும் கட்டை...
    நெஜமாவே எனக்கு இந்த படம் பிடிச்சிருந்தது.
    இத்தனைக்கும் நான் விஜய் ரசிகனும் அல்ல.(அஜித் ரசிகனும் அல்ல !)
    (அது உனக்கும் தெரியும் ?! )
    வருகைக்கும், மறுமொழிக்கும் ( கமென்ட்) நன்றி.
    மீண்டும் வருக !!

    ReplyDelete
  5. என்னதான் மாங்கு மாங்குன்னு மறுமொழி எழிதினாலும் மாடரெசனை வச்சு தூக்கிடுவீங்க. ஆனாலும் நான் எழுதுறது உங்களுக்கு தானே. உங்கள் விமர்சனத்தில் எனக்கு தோன்றிய பெரிய காமடி வேட்டைகாரனை வித்தியாசமான படம்னு நீங்க சொன்னதுதான். இந்த சென்னை ரவுடிகளை ஒழிக்கிற கதைகளை விஜய் இந்த வேட்டைக்காரன் மூல்மாக சொன்னது தானே வித்தியாசம்னு சொல்றீங்க. திருப்பாச்சின்னு ஒரு படம் பண்ணார், புதுப்பேட்டை படம் அது காதலுக்காக சென்னை ரவுடிகளை பந்தாடுவார். விஜய் பத்தாம சென்னை ரவுடிகளே பந்தாடுவதற்கு வேறு சில ஹீரோக்களும் டிரை பண்ணி சென்னை ரவுடிகளே காலில் விழுந்து கதறுகிற அளவுக்கு படம் வந்திடுச்சு. தமிழ்நாடே கலக்கிகொண்டிருக்கும் இன்ஸ்பெக்ட்ரை நடுரோட்டில் கரைப்பான் பூச்சி மருந்தடிச்சு கொல்வது நம்பும்படியாகவே இல்லை. பல படங்களின் தொகுப்பு தான் இந்த வேட்டைக்காரன். படத்தின் பாடல்களை தவிர வேறு ஒன்றும் சிறப்பாக இல்லை. உங்களுக்கு உண்மையிலேயே பெரிய மனசு சார்.

    ReplyDelete
  6. @cena
    உங்கள் மறுமொழியை தூக்குவதற்காக கமென்ட் மாடரேசன் வைக்கவில்லை நண்பரே. தேவையற்ற ஆபாச , விளம்பர , பின்னூடங்களை தவிப்பதற்காகவே !! மாறாக உங்கள் மறுமொழிகள் தான், எந்த ஒரு பதிவருக்கும் ஊக்கமளிப்பவை.

    வேட்டைக்காரன் வித்தியாசமான படம் என்பதை , வில்லு மற்றும் குருவி படங்களுடன் ஒப்பிட்டே, நான் கூறினேன் .

    ///////////////////////////////////////////////

    கீழே உள்ள படங்களில் வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுங்கள் . (ஆங்கிலத்தில் சொன்னால் , ' ஆட் மேன் அவுட் ! )

    >> குருவி ,
    >> வில்லு ,
    >> வேட்டைக் காரன்.

    /////////////////////////////////////

    தமிழ்ப் படங்களில் லாஜிக் எதிர்பார்க்க முடியாது ! ஒரு நல்ல என்டர்டைனர் படத்திற்கு லாஜிக் தேவையில்லை என்றும் நான் நினைக்கிறேன்.

    வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.
    மீண்டும் வருக !!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...