Monday, February 15, 2010

நன்றிப் பெருவிழா ... நற்றமிழ்த் திருவிழா...

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் , காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, கலைஞருக்கு பாராட்டு விழா (எத்தன ? )எடுக்கும் நோக்கத்தில் , மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் (ஆமா, அவரேதான் !! ) ஏற்பாடு செய்திருந்த, " நன்றிப் பெருவிழா... நற்றமிழ்த் திருவிழா " என்ற பெயரில் ஒரு விழா எடுத்தார்கள்! காலைமுதலே , கருத்தரங்கம் ,அது இது என்று 'களை' கட்டத் தொடங்கியிருந்தது வள்ளுவர் கோட்டம் !



நான் மதியம் 3  மணிக்குதான் போய் சேர்ந்தேன். நண்பன் வருவதற்கு , கொஞ்சம் தாமதமானதால் , கொஞ்ச நேரம் அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்தேன். சரி உள்ள போய் பார்க்கலாமுன்னு , தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே நுழைந்தவுடன், 'டாஸ்மாக்' வாசனை தூக்கியது. ஆங்காங்கே, உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து , தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள் ! வள்ளுவர் கோட்டம் அருகே இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்திருக்கும்.


4  மணி வரை, "லக்ஷ்மன் ஸ்ருதி" இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. உடன் பிறப்புகள் ஆங்காங்கே 'உற்சாக நடனமாடி' க்கொண்டிருந்தார்கள் . எல்லோரும், அவரவர் ஊர்களில் இருந்து , வேன் ,லாரி மூலம் கும்பலாக வந்திருந்தார்கள். 6  மணி போல, V .I .P கள் வரத் தொடங்கியிருந்தார்கள். துணை முதல்வர் முதலாவதாக வந்து சேர்ந்தார்.கொஞ்ச நேரம் கழித்து, அஞ்ச நெஞ்சனும் வந்து சேர, விழா இனிதே ஆரம்பமாகியது. எக்கச் சக்க செலவு செய்திருந்தார்கள். உபயம் : ஜெகத் ரட்சகன்.


ஏதோ சினிமா செட் போல அமைத்திருந்தார்கள். ராஜா காலத்து செட். வந்திருந்த அனைவரையும் (V .I .P  களுக்கு தான், நமக்கல்ல !) வழி நெடுக சேவகர்கள் நின்று வரவேற்றார்கள். ராஜ நர்த்தகி யின் நடனம் கூட இருந்தது. பின்பு , அரசவையில் அனைவரும் உட்கார்ந்து , புகழ் பாட ஆரம்பித்தார்கள். இரண்டு மத்திய அமைச்சர்கள், ரஜினி , கமல் என்று ' பழைய ' ஆட்கள் தான் இந்த முறையும் !

ரஜினி, கமல் உடன் மம்மூட்டியும் வந்திருந்தார்கள். யாரும் மிரட்டியதாகத் தெரியவில்லை! நானும், அ.தி.மு.க MLA யாரவது தி.மு.க வில் சேர வந்திருக்கிறார்களா என்று பார்த்தேன்.கண்ணுக்கு யாரும் புலப் படவில்லை!!! கொஞ்ச நாள் WAIT பண்ணுவோம்! " என்னடா வருஷம் ஆரம்பிச்சு , இன்னும் ரெண்டு பாராட்டு விழாதான் நடந்திருக்கு ?" ன்னு நெனைக்கறதுக்குள்ள , இந்த விழா!!

ஒரு வேளை ,கலைஞரே , "இனிமே , எனக்கு பாராட்டு விழாவே எடுக்கக் கூடாது " ன்னு சொன்னாலும் , "பாராட்டு விழாவே வேண்டாமென்று சொன்ன பெருந்தலைவா !!! " என்று அடுத்த விழா நடத்தி விடுவார் ஜகத் ரட்சகன்  !!!

No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...