Thursday, February 25, 2010

அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டதா?

டிஸ்கி : இது ரொம்ப நாட்களுக்கு முன்னாடி நான் எழுதிய இடுகை. அப்போது 
திரட்டிகளில் இணைக்காமல் விட்டதால், இப்போது !

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

கொஞ்ச நாட்களாகவே, தமிழக அரசியலில் , கூட்டணி மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு சற்று பலமாக கேட்கத் துவங்கியிருக்கிறது. ஜெயலலிதா, தேர்தல் கமிஷன் விழாவில் பங்குபெற்றது முதலே இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த விழா ஆரம்பிப்பதற்கு மு, ஜெயலலிதாவும் , சோனியா காந்தியும் சந்தித்து பேசிக்கொண்டார்கள் என்ற செய்தியும் பெரிதாக பேசப் பட்டது. என்ன தான் நடக்கிறது நாட்டில் ?!


எஸ்.வீ. சேகர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டது தான் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆரம்பமாக நான் நினைக்கிறேன்.பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து விலகி மீண்டும் MLA ஆனார்.அவரைத் தொடர்ந்து , மேலும் இரண்டு MLA க்கள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் , மேலும் 20 MLA க்களை , திமுகவினர் 'உஷார்' செய்து விட்டதாகவும், அவர்கள் எந்நேரமும், அதிமுகவில் இருந்து வெளியேறலாம் என்றும் பேசப் படுகின்றது.



இதற்கிடையில், பென்னாகரம் இடைதேர்தல் தேதி வேறு அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாமக சார்பில் ஏற்கனவே வேட்பாளர் அறிவிக்கப் பட்டாகிவிட்டது. இப்போது , திமுக,அதிமுக ,தேமுதிக போன்ற கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். பென்னாகரம் தொகுதி மக்களுக்கு  கொண்டாட்டம் தான்! ஆனால் , இந்த இடைத் தேர்தலிலேயே தேமுதிக - அதிமுக கூட்டணி வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், பேரம் சரிவரவில்லை போலும்!


எது எப்படியோ , வரும் 2011 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்டணி எப்படி இருக்கக் கூடும் ?  திமுக + பாமக + விசி மற்றும் அதிமுக + தேமுதிக + காங்கிரஸ் + மதிமுக ? தோழர்கள் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.


                           நன்றி - புகைப்பட உதவி : www.haryanawatch.blogspot.கம


தமிழகத்தில் , தற்போது ஆட்சியை பிடிக்குமளவிற்கு செல்வாக்கு இல்லையென்றாலும் கூட, அமைச்சரவையில் பங்கு பெறுமளவிற்கு காங்கிரசிற்கு தகுதி இருப்பதாக, ராகுல் காந்தி நினைக்கிறார்.இதை அவ்வ போது , இளங்கோவனும் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் கலைஞர் இதற்கெல்லாம் செவி கொடுக்கப் போவதில்லை.விஜயகாந்தும் , ஒரு 10 ,15  MLA க்களாவது கட்சிக்கு தேவை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார். இது குறித்த பேச்சு வார்த்தைகளும் கூட , கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கிடையில் ஆரம்பித்துவிட்டதாக, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
 
எது எப்படியோ 2011 , ஆம் ஆண்டு சட்ட மன்ற  பொதுத் தேர்தல்,தமிழக அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல , தமிழக மக்களுக்கும் கூட சற்று எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.தமிழகத்தில் இருக்கக் கூடிய , கிட்டத் தட்ட 10 'வருங்கால ' முதல்வர்கள் கதி , நமது 'கை'யில் (அதாவது , HAND ! நீங்க அந்த 'கை' ன்னு நெனைச்சா, அதுக்கு நான் பொறுப்பில்லை !) தான் இருக்கிறது.





எப்படியாவது , 2011 க்குள் , வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!




UPDATE : இப்போ வாக்காளர் அடையாள அட்டை வாங்கிட்டோம்ல ?! எது எப்படியோ , 2011  நம்ம கை(விரல்-ல!) லதான் !


                                          நன்றி - புகைப்பட உதவி - www.article.wn.com


No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...