முன்குறிப்பிற்கு முன் குறிப்பு : இது ஒரு மீள் பதிவாகும்.இந்த பதிவை,முதல் முறை எழுதும் போது, என்னுடைய வலைப்பூவை பல திரட்டிகளில் இணைக்காமல் இருந்தேன்.இப்போதுதான் இணைத்திருப்பதால், என்னுடைய ப்ளாக் ரசிகர்களுக்காக ( ! ) மீள்பதிவிடுகிறேன்.
முன்குறிப்பு : இது , சும்மா , விளையாட்டுக்கு நான் போடும் பதிவாகும். சீரியசான பதிவர்கள் இதைப் படித்துவிட்டு என் மேல் கடுப்பாக வேண்டாம். இதை ஒரு புதிய பதிவரின் ஆர்வக் கோளாறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் போல் வலைதளங்களும் மக்கள் அதிகம் புழங்கும் மீடியாவகும். எனவே இதை நான் மிகவும் மதிக்கிறேன் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------
கூகிள் புண்ணியத்திலோ அல்லது வேர்டு பிரெஸ் புண்ணியத்திலோ ஒருவழியாக, ஒரு இலவச பிளாக் வெகு சுலபமாக கிடைத்து விடுகிறது. ஆனால், கல்யாண பந்தியில் , அளவு தெரியாமல் நிறைய சாப்பாடு வாங்கிக் கொண்டு, கடைசியில் சாப்பிட முடியாமல் முழிப்பதை போன்று, ஒரு புதிய பதிவு போட முழித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பதிவு இது.
புதிய பதிவு போட என்னால் முடிந்த சில யோசனைகள் :
1.மென்பொருள் துறையில் பணிபுரியும் பலருக்கு, தினமும் பல ' பார்வார்ட் ' மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் ஏதாவது ஒன்றை , புது பதிவாக போட்டு , இறுதியில் நண்பன் மெயில் பண்ணியது என்று பின் குறிப்பிடலாம்.
2. ஏதாவது , ஒரு பத்திரிகை செய்தியை அப்படியே போட்டு கடைசியில் அந்த பத்திரிகைக்கு நன்றி நவிலலாம்.
3. உங்கள் மொபைல் போனில், நீங்கள் எப்போதோ எடுத்த பழைய புகைப்படங்களை போட்டு 'ஆட்டோகிராப் ' என்று தலைப்பிடலாம்.
4. நீங்கள் ஏற்கனவே பிரசுரம் செய்த பதிவை ' மீள் பதிவு ' என்று புது தலைப்பு போட்டு புது பதிவாக கணக்கில் ஒன்று அதிகரிக்கலாம்.
5.சக பதிவர்களின் பதிவையோ அல்லது புதியதாக வெளியிடப்பட்ட புத்தகங்களையோ அல்லது நீங்கள் பார்த்த திரைப்படங்களையோ விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று புது பதிவிடலாம். மதிப்பெண்கள் கூட வழங்கலாம்.
6. உங்களின் பயணங்களை ஒரு ' பயணக் கட்டுரை ' யாக சில படங்களுடன் வெளியிடலாம்.
7.அரசு இயந்திரத்தின் குளறு படிகள், சமூக அவலங்கள் போன்றவற்றை சற்றே கார சாரமாக எழுதலாம். முடிந்த வரை கெட்ட வார்த்தைகளை தவிர்த்தல் நலம்.
8.சில சமையல் குறிப்புகளை அவற்றின் படங்களுடன் போடலாம். நீங்கள் அந்த உணவை செய்து பார்த்துதான் குறிப்புகளை சொல்ல வேண்டும் என்று இல்லை.
9.அல்லது , ' புதிய பதிவு போடுவது எப்படி ? ' என்பதைப் போல , சில யோசனைகளைப் பட்டியலிடலாம். பட்டியல்களுக்கு தேவையான யோசனைகளுக்கு இதைப் போன்ற வலைத் தளங்களின் பதிவுகளை ஒருமுறை வாசித்தால், உங்களுக்கே ஒரு ' ஐடியா ' கிடைக்கும்.
பின் குறிப்பு : முன்குறிப்பை இன்னொரு முறை படிக்கவும்.
Nanba enal en nanbargalai adikadi parka mudiyathu antha kavalai ungal blog padithal pogirathu
ReplyDeleteMikka Nanri Nanbare,(ungal disclaimer arumai)
Arun
Jakarta
@Arun...
ReplyDeleteதங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே...
அடிக்கடி இந்த பக்கம் வாங்க...
//(ungal disclaimer arumai)///
ஹி..... ஹி....
ஓ சாரி பாஸ், நான் இதை இதுவரை பார்க்கவில்லை. ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் அவர் அவர் நடையில் எழுதி இருக்கிறோம்.
ReplyDeleteதவறாக நினைக்க வேண்டாம்.
இதுல தப்பா நெனைக்க என்னங்க இருக்கு ?!
ReplyDeleteஜஸ்ட் ஒரு இம்ப்ரமேசன் ..... அவ்ளோதான்...
நீங்க கண்டின்யு பண்ணுங்க தல...
;)
என் இனமைய்யா நீங்கள்...
(என் இனமடா நீ...!!! என்பதன் 'மரியாதையான' ,'மொழி' பெயர்ப்பு !)