Tuesday, March 30, 2010

அங்காடித் தெரு...

கடந்த சனிக் கிழமை , நானும் நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் "அங்காடித் தெரு " திரைப்படம் பார்த்தோம். எங்கே டிக்கெட் கிடைக்காமல் போய் விடுமோ என்று 2 .30 மணி ஷோவிற்கு , 2  மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரில் ஆஜர் ! கிட்டத் தட்ட 10 வது ஆளாக நின்று கொண்டிருந்தேன். கூட்டம் குறைவு தான்! 25 ரூபாய் டிக்கெட்.வாங்கிக் கொண்டு உள்ளே போய் FAN க்கு கீழே இடம் போட்டு உக்காந்தாச்சு !



வசந்த பாலனுடைய  'வெயில்' திரைப்படம் எனக்கு பிடித்தமான திரைப் படங்களில் ஒன்று ! ஆனால், அந்த படத்தை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது (?!) , CD யில் பார்த்தது ! அது அறியாத வயசு ! இப்போதெல்லாம் திரைப்படங்களை  ( திருட்டு ) CD யில் பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே ஒரு வித ஆர்வம்  கலந்த எதிர்பார்ப்புடன் தான் படத்திற்கு சென்றேன்.படத்திற்கு அவ்வளவாக விளம்பரம் செய்யப் படவில்லை என்பதால் கூட கூட்டம் குறைவாக இருந்திருக்கக் கூடும் !

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இது ஒரு 'எதார்த்த' சினிமா என்று உணர்த்தி விடுகிறார்கள் . " அது என்னடா ?! ஆ, ஊன்னா எதார்த்த சினிமா , எதார்த்த சினிமா - ன்னு சொல்றீங்க ?!" ன்னு கேட்கிறீர்களா ? ஒண்ணுமில்லைங்க , படத்தில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நடக்க சாத்தியம் இருந்தால் , அதுதான் எதார்த்த சினிமா ! படத்தின் கதாபாத்திரங்களில் ,உங்களையும் , உங்களை சார்ந்தவர்களையும் எளிதாக பொருத்திப் பார்க்க முடிகிறதென்றால் அதுதான்  எதார்த்த சினிமா !!



நமக்கு வெறும் செய்திகளாகத் தெரியும் நிகழ்வுகள், அது சார்ந்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அழகாக , மிக அழகாக சொல்லியிருக்கிறார் வசந்த பாலன். கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் மகேஷ் , சரியான தேர்வு. அஞ்சலியும் கூட ! மகேஷின் நண்பன் - மாரிமுத்து வாக நடித்திருப்பவரும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். துணிக் கடையில் SUPERVISOR ஆக வரும் இயக்குனர் A .வெங்கடேஷ் அந்த பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம் ! வாழ்த்துக்கள் !! இது போன்று , கதாபாதிரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்வதிலேயே வெற்றிக்கு பலமான அடித்தளம் போட்டிருக்கிறார் வசந்த பாலன் .படம் நெடுக , சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து ஆச்சர்யமூடுகின்றன !


இசையமைப்பாளர்கள் இருவர் - G .V பிரகாஷ் குமார் மற்றும் விஜய் ஆண்டனி. "அவள்அப்படி ஒன்றும் அழகில்லை " தவிர மற்ற பாடல்கள் எதுவும் படம் பார்ப்பதற்கு  முன்பு தெரியாது . படம் பார்த்த பிறகும் கூட. ஆனால் , எந்த பாடலும் தேவை இல்லாத இடைச்செருகலாக தெரிய வில்லை! ஜெய மோகனின் வசனங்களும் படத்திற்கு ஒரு பலம் தான் ! ஒளிப்பதிவாளரும் வசந்த பாலனுக்கு கை கொடுக்கிறார். கலை இயக்குனருக்கும் பாராட்டுகள் !!



படம் பார்ப்பதற்கு முன்பு நண்பனின் கருத்தை கேட்ட போது, "மெகா சீரியல் மாதிரி இருக்குடா " ன்னு சொன்னான் ! எனக்கொன்றும் அப்படித் தோன்ற வில்லை.எனக்கு மெகா சீரியல்கள் பிடிப்பதில்லை , நான் பார்ப்பதுமில்லை !! எனக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கையில் , இன்னுமொன்றை கூட்டியிருக்கிறார் வசந்த பாலன்.

அங்காடித் தெரு - தி.நகர் ரங்கநாதன் தெரு !!

மேலும் விவரங்களுக்கு ,

அங்காடித் தெரு - திரைபடத்தின் இணையதளம் CLICK க்குங்க

5 comments:

  1. உண்மை தான்...!!!
    கதாபாத்திரங்களை கச்சிதமாக தேர்ந்தேடுதிருக்கிறார் வசந்தபாலன்...

    ReplyDelete
  2. உங்களை போன்றவர்களின் வலை தளங்களை பார்த்ததும்
    எனக்கும் ஒன்றை தொடங்கிட ஆசை வந்தது..
    தொடங்கியும் விட்டேன்..

    சின்சியர் பிரண்டு என்ற பெயரில் உங்களுக்கு அறிமுகமானவன்..
    தொடர்பில் இருங்களேன்..

    http://karuthuchidharal.blogspot.com/

    ReplyDelete
  3. @நாடோடித்தோழன்
    நிச்சயம் நண்பரே...
    இனிய வலைப்பதிவு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...