Friday, May 7, 2010

தலைப்பில்லாப் பதிவுகள், கலைஞருக்கு ஒரு கடிதம்,பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?

ஒரு  நல்ல விஷயம்....
இப்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் புதிய வகை சொகுசுப் பேருந்துகளை (TATA MARCOPOLO ) விட்டிருக்கிறார்கள்.உண்மையிலேயே வண்டி நல்லா  இருக்குங்க ! ஒரு SEAT -  கும் , அடுத்த SEAT கும் நல்ல இடைவெளிகள்  இருக்கிறன்றன.FREE யா கால் வெச்சி உக்காரலாம். SEAT குஷன் கூட நல்லா இருக்கு ! பழைய ASHOK LEYLAND டீலக்ஸ் வண்டி ரொம்ப மோசங்க ! டயர் மேல இருக்குற கிட்டத் தட்ட 12 SEAT ல உக்காரக் கூட முடியாது ! ஆனால் அது  போன்ற வண்டிகளில் பெரும்பான்மையானவற்றை இப்போது M சர்வீஸ் வண்டிகளாக மாற்றி வருகின்றனர். நல்ல விஷயம் தானே ?!



***********************************************************************************
கலைஞருக்கு ஒரு கடிதம்...
தங்களின் இலவச திட்டங்கள் தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளன என்று தாங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். நல்லது.ஆனால் மக்களுக்கு தேவையான இன்னும் சிலவற்றையும் தாங்கள் செய்து கொடுத்தால், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு 'செலவு' அதிகம் இருக்காது என்பது எனது கருத்து.கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி  திட்டம், கலைஞர் வண்ணத் தொலைகாட்சி திட்டம், ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் , என ஏகப் பட்ட திட்டங்கள் தீட்டி மக்களுக்கு உழைக்கும் உங்களால் இன்னும் சில திட்டங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுவதால், இந்த கடிதம்.

கலைஞர்  குடிநீர்த் திட்டம் :
இப்பொழுதெல்லாம், சென்னையில் ஓரளவிற்கு நல்ல குடிநீர் வேண்டுமென்றால்,  குறைந்தது 25  ரூபாயாவது கொடுத்தால் தான் , 25 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.  "அதான் மெட்ரோ வாட்டர் வீட்டுக்கு வீடு வருகிறதே ?! " என்று நீங்கள் கேட்கும் முன்னர் நான் இன்னொரு விஷயத்தை சொல்லி விடுகின்றேன். எனக்குத் தெரிந்து , மெட்ரோ வாட்டர் தண்ணீரை மக்கள் சமைப்பதற்கு மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர். சென்னையின் அறுபது சதவிகித மக்கள் குடிப்பதற்கு மினரல் வாட்டரை மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர்.நான் உங்களை , ' கலைஞர் இலவச குடிநீர்த் திடம் ' கொண்டவர சொல்லவில்லை. 'கலைஞர் மலிவுவிலை குடிநீர்த் திட்டம் ' மாதிரி ஏதாவது செய்யுங்களேன் ! நன்கு உறுப்பினர்களை கொண்ட  சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு வாரம் மூன்று முதல் நான்கு வரை தண்ணீர் கேன்கள் தேவைப்  படுகின்றன. ஆக வாரத்திற்கு 100 ரூபாய்.மாதம் 400 ரூபாய். ஒரு மாதத்திற்கு நீங்கள் தரும் அரிசிக்கு செலவு 20 ரூபாய்.எங்கள் குடிதண்ணீர் தேவைக்கு செலவு 400 ரூபாய் !



கலைஞர் வீடு வாடகைத் திட்டம் :
நீங்கள் இப்போதைக்கு சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்திருக்கீர்களா ? சென்னையில் ஓரளவிற்கு நல்ல வீடு வாடகைக்கு வேண்டுமென்றால், நீங்கள் குறைந்தது மாதம் 8000 முதல் 10000 வரை செலவு செய்ய வேண்டும் ( இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க இங்க யாருமே இல்லையா ?! ). கிட்டத்தட்ட ஒரு இந்தியனின் சராசரி மாத வருமானத்தை விட அதிகம் ! இதுக்குன்னு RENT CONTROL BOARD  னு ஏதோ இருக்காமே ?
எதாவது பாத்து பண்ணுங்க சார்!

வேணும்னா , நாகநாதன் சாரையும், சண்முக நாதன் அண்ணாவையும் கேட்டுப் பாருங்க , எல்லாத்தையும் தெளிவா சொல்லுவாங்க !மேலும் வேற ஏதாவது திட்டம் எனக்கு தோன்றும் போது பதிவிடுகிறேன், பார்த்துக் கொள்ளுங்கள் !

***************************************************
பந்தல் இங்கே , தண்ணீர் எங்கே ?
கோடைக் காலத்தின் மத்தியில் இருக்கிறோம் நாம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதையே வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ! இந்த நிலையில், நமது அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மகா கேவலமாக இருக்கிறது, வழக்கம் போலவே !

"வெயிலின் கொடுமையை கருத்தில் கொண்டு , போது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆங்காங்கே ,தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகத்தை தணிக்க வேண்டுமென்று ஆணை "

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி , எல்லா கட்சித் தலைமையகங்களும் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுவாகத்தான் இருக்கும்! உடனே , உடன் பிறப்புகளும் , இரத்தத்தின் இரத்தங்களும் , இன்ன பிற அரசியல் கட்சித் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு , தண்ணீர் பந்தல் களை அமைத்தனர். முதல் நாள் , தர்பூசணி , வெள்ளரி, நீர் மோர், ரசனா என்று கலை கட்டியிருக்கும் - புகைப்படங்களும் , வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையில் ! இப்போது கேடாரற்று கிடக்கின்றன (சென்னையின் ) அனைத்து தண்ணீர் பந்தல்களும் ! ஒரே ஆறுதல், மக்கள்,  நிழலுக்காக ஒதுங்குவதற்கு பயன்படுகின்றன இந்த தண்ணீர் பந்தல்கள் !

ஆனால், எந்த விளம்பரமும் இல்லாமல் , தண்ணீர் பந்தல் அமைத்து தொண்டாற்றும் எத்தனையோ வீடுகளை, நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன் ! மகாத்மா காந்தி சொன்னார் , 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது '. இந்தியா மட்டுமல்ல, மனிதர்களும் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள் !!



சென்னை போன்ற பெரு நகரங்களில் , நம் வீட்டிற்கு தண்ணீர் வாங்கவே , ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ஒரு ரூபாய் செலவாகும்போது  , நாம் எங்கே தண்ணீர் பந்தல் வைப்பது ?! ஆனால், ரஜினி காந்தின் கல்யாண மண்டபத்தில் தனமும் 200 லிட்டர் பால்,மோராக்கப்பட்டு , மோர் பந்தல் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது என்று அறிந்தேன். பாராட்டுக்கள் !!

4 comments:

  1. 'கலைஞர் மலிவுவிலை குடிநீர்த் திட்டம் ' மாதிரி ஏதாவது செய்யுங்களேன் !
    //

    அதையும் டாஸ்மார்கிலேயே விற்கலாம்..ஹா.ஹா..
    ( அடுத்த தடவை சமாளிக்க ஈசியா இருக்கும் சார்..)

    ReplyDelete
  2. @ பட்டாபட்டி....
    வாங்க பட்டாபட்டி....

    //அதையும் டாஸ்மார்கிலேயே விற்கலாம்////

    இதப் பத்தி நாளைக்கே டெல்லில பேசறேன்...
    இன்னிக்கு நைட் ப்ளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணுங்க...!!!

    தங்களின் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete
  3. @ Jegankumar.SP....
    வாங்க Jegankumar.SP
    தங்களின் ஊக்கத்திற்கு நன்றி... மீண்டும் வருக..

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...