எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
வானொலியுடனான எனது நட்பை குறித்த இடுகை இது.
நன்றி - புகைப்பட உதவி: www.abagond.wordpress.com
பால்யத்தில், அடிக்கடி தஞ்சாவூருக்கு எங்கள் தாத்தாவைப் பார்க்க போவதுண்டு. 75 - 80 வயது இருக்கும் அவருக்கு.எப்போதும் கையில் ஒரு TRANSISTOR வைத்திருப்பார். மெதுவாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த TRANSISTOR தான் அவரின் பெரும்பாலான நேரங்களில் துணையாக இருக்கும் - பாட்டி இறந்த பின்பு !கூடவே ஒரு பெரிய ரேடியோவும் வைத்திருப்பார். செய்திகள் வரும் நேரங்களில் ,அதனை TUNE செய்வது தான் "சக" பேரப்பிள்ளைகளின் வேலை. எல்லா அலைவரிசைகளிலும் எந்தெந்த நேரங்களில் செய்திகள் வரும் என்பதை மனப் பாடமாக தெரிந்து வைத்திருந்தார் .
நன்றி - புகைப்பட உதவி : www.jamthechannel.com
அதனை கேட்டுக் கொண்டே தூங்கியும் விடுவார். "சரி தூங்கி விட்டாரே" , என்றெண்ணி ரேடியோவை OFF செய்தால், உடனே விழித்துக் கொள்வார் ! பல முதியவர்களின் உற்ற தோழனாய் இருந்து கொண்டிருந்தது வானொலிதான். அதனுடனான நெருக்கத்தை, அவர்கள் தொலைக் காட்சியுடன் கொண்டிருக்கவில்லை !
என் சிறுவயதில், வானொலியில் திரைப் படங்களை வசனத் தொகுப்பாக ஒலி பரப்புவார்கள்.இப்போதும், "தெய்வ மகன்" படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம், அதன் வசனத் தொகுப்பைக் கேட்ட அந்த மாலைப் பொழுது , மனதில் மீள் பதிவாகிறது ! இப்போதெல்லாம் , வானொலி என்றாலே FM ஞாபகம் தான் வருகிறது !கொஞ்ச நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நன்றி - புகைப்பட உதவி : www.blog.emman.in
சென்னை வந்த புதிதில் , FM கேட்பது என்பது புதிய அனுபவத்தைக் தரக் கூடியதாய் இருந்தது. அப்போதெல்லாம் , தனியார் நிறுவன FM களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அரசு வானொலியின் ஒரு பிரிவான FM ரெயின்போ 101 .4 தான் எனது விருப்பம் ! தொகுப்பாளர்கள் , ஏதோ நம் அண்டை வீட்டுக் காரர்கள் போல் உணரவைக்கிறார்கள் ! மணிக்கொரு முறை செய்திச் சுருக்கம் , அடிக்கடி பழைய பாடல்கள் என நெருக்கமாயிருக்கிறது ! 105 .6 பண்பலை, மாலை நேரங்களில் நல்ல நாடகங்களை ஒளிபரப்புகிறார்கள் . 102 .3 FM கோல்டில் , விரிவான செய்திகள் கேட்கலாம். பணி முடிந்து, கூட்டமில்லா மாநகரப் பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்தால், அந்த பயணத்தில் நிச்சய தோழன் 101.4 FM ரெயின்போ தான் !
காலப் போக்கில் , "MODERN ஆக்குகிறேன்" என்ற பெயரில் இது போன்ற வானொலி சேவைகளின் பழமையை மாற்றாமலிருக்க வேண்டும் ! எங்கள் வீட்டில் பழைய CASSET கள் நிறைய உண்டு ! ஆனால், 'பல' முறை பழுது பார்த்தும் , மீண்டும் மீண்டும் பழுதாகிக் கொண்டேஇருந்தது ! சரி ஒரு புது TAPE ரெகார்டர் வாங்கலாமென்று, ஒரு 15 கடைகளில் ஏறி இறங்கியிருப்பேன் ! எங்குமே கிடைக்கவில்லை !
நன்றி - புகைப்பட உதவி: www.sony.lv
ஒருமுறை, என் தந்தை, "உங்களைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் , ஏதாவது வாங்கி வர வேண்டுமா" என்று தாத்தாவை கேட்டதற்கு - "ஒரு TRANSISTOR மட்டும் வாங்கிட்டு வாடா !" என்றார். சில வருடங்களில் தாத்தா இறந்தும் விட்டார் ! அவர் வைத்திருந்த இரண்டு TRANSISTOR களும், ஒரு பெரிய ரேடியோவும் பழுதாகிப் போயிருந்தன ! இப்போது அந்த வீட்டில் யாரும் வானொலி கேட்பதில்லை. அதனைப் பழுது பார்க்க, யாரும் விரும்புவதுமில்லை, யாருக்கும் நேரமுமில்லை ! ஆனால், வானொலியானது, தன் அலைகளை காற்றில் பறக்கவிட்ட படியேதானிருக்கிறது , அதனைக் கேட்பவர்கள்தான் குறைந்து விட்டார்கள் !
Friday, December 24, 2010
Saturday, December 18, 2010
ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 1
டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !
இந்தியாவில் இப்போதைய "ஹாட்" டாபிக் - ஸ்பெக்ட்ரம் தான் ! இது போன்றதொரு 'நிகழ்வு' மன்னர் (இராஜ ராஜ சோழன் அல்ல !) காலத்தில் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவே இவ்விடுகை !
நன்றி - புகைப்பட உதவி : www.serpholicmedia.com
ஆனால் அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் இல்லையே ?! அது இல்லாட்டி என்ன , எப்படியும் தூது விட புறா வாங்கித் தானே ஆகணும் ?!
=====================================================================================
"மந்திரி தான் புறா விற்றதில் எந்த ஊழலும் நடக்க வில்லை என்கிறாரா ?"
"ஆமாம், தான் செய்த அனைத்தும் மன்னருக்கு தெரிவித்து விட்டுதான் செய்ததாக சொல்கிறார் !"
=====================================================================================
"மந்திரி , தன் பதவியை இராஜினாமா செய்து விட்டாராமே ?!"
"ஆமாம் ."
"ஆனால், கடந்த மாதம் , தான் ஊழலே செய்ய வில்லை என்று சொன்னாரே ?!"
"ம்ம்... கேட்டால், 'அது போனா மாசம், இது இந்த மாசம் ' என்கிறார் !"
=====================================================================================
புறா விற்றதில் , இதற்கு முன்னாள் இருந்த மந்திரிகள் என்ன வழிமுறைகள் பின்பற்றினார்களோ , அந்த வழி முறைகளைத்தான் நானும் பின் பற்றினேன் என்பதை அவையோருக்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் !
=====================================================================================
நன்றி - புகைப்பட உதவி : http://oratorgreat.blogspot.com/
" மன்னர் ஏன் திடீரென்று செல் போன் கனெக்ஷனை துண்டித்து விட்டு, 200 தீப்பெட்டிகளும், நூலும் ஆர்டர் செய்துள்ளார் ?! "
"செல் போனில் பேசினால் ஒட்டுக் கேட்கிறார்களாம் ! அதனால், இனிமேல் தீப்பெட்டித் தொலை பேசி மூலம் தான் பேசுவாராம் !"
=====================================================================================
"மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"
"ஏன் , என்ன ஆச்சு ?!"
" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!"
Saturday, November 27, 2010
ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !
ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும். இது நடந்து.
வழக்கமாக நான் செல்லும் பேருந்து , வழக்கம் போல தாமதமாகத்தான் வருமென்பதால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் முழுக்க, ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது, பீக் ஹவர்களில் எப்போதுமே இப்படித்தான் !
நன்றி - புகைப்பட உதவி : www.thehindubusinessline.com
இவ்வளவு நாட்களாக, ஒரே பேருந்தில் (வழித் தடத்தில் ) சென்று வருவதால், சக பயணிகள் நன்றாகவே அறிமுகமாகியிருந்தார்கள்.ஆனால் யாருடனும் பேசிக் கொண்டதில்லை ! வழிமேல் விழிவைத்து காத்திக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரியவர் என்னருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக என்னுடனான உரையாடலை ஆரம்பித்தார், என் பதிலை எதிர்பார்க்கமலேயே !
**********************************************************************************************
**********************************************************************************************
"அனாவசியமாக" யாரிடமும் பேசக் கூடாது என்பது , மாநகர வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் போதித்து விடுகிறது போலும் ! பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் - யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.இவர் ஏன் குறிப்பாக என்னிடம் வந்து சுய புராணம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ?! அவர் பேசும் தொனியில் இருந்தே, ஏதோ பண உதவி கேட்கப் போகிறார் என்பதை ஊகித்தவனாய் நின்று கொண்டிருந்தேன்.
**********************************************************************************************
நன்றி - புகைப்பட உதவி :www.shutterstock.com
**********************************************************************************************
சொல்லி முடிதவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.
எவ்வளவு கஷ்டம் ?! ஒருவரிடம் உதவி கேட்பதற்கு முன்பு நாம் எவ்வளவு யோசிப்போம் ?! அதுவும் முகம் தெரியாத ஒருவரிடம் ? ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும் தானே ?! அதுவும் தன் பேரனைப் போல வயதுடைய ஒருவனிடம் காசுக்காக கேட்டு நிற்பது என்றால் , அவர் எவ்வளவு யோசித்திருப்பார் ? இது வரை எத்தனை பேரிடம் கேட்டிருப்பாரோ ? பரிதாபம் .
ஆனால் , நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! மாதம் ஆயிரக் கணக்கில் (!) சம்பாதிக்கிறோமே, ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது, இல்லையில்லை ஒரு 50 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! பாவம் பெரியவர். 50 ரூபாய் எடுத்த என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்.
"லாரிக் காரங்க 100 ரூபாய்க்கு கொறைஞ்சு ஏத்த மாட்டாங்க தம்பி"
ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! 100 ரூபாயைக் கொடுத்து ,
"சரிங்க ஐயா.அழுவாதீங்க . பத்திரமா ஊருக்குப் போய் சேருங்க " ன்னு சொல்லி அனுப்பினேன். நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! அன்று முழுவதும், பெரியவர் ஊருக்குப் போய் விட்டதாகவும், பொஞ்சாதியுடன் சந்தோசமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டேன் .

"நீங்க இந்த ஊருதானா தம்பி ?"
".............."
"எங்க வேல பாக்குறீங்க ?"
".............."
"எனக்கு கன்னியாகுமரி பக்கங்க !"
".............."
**********************************************************************************************
"அனாவசியமாக" யாரிடமும் பேசக் கூடாது என்பது , மாநகர வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் போதித்து விடுகிறது போலும் ! பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் - யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.இவர் ஏன் குறிப்பாக என்னிடம் வந்து சுய புராணம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ?! அவர் பேசும் தொனியில் இருந்தே, ஏதோ பண உதவி கேட்கப் போகிறார் என்பதை ஊகித்தவனாய் நின்று கொண்டிருந்தேன்.
**********************************************************************************************
"எனக்கு நாலு பசங்க தம்பி..."
".............."
"யாருமே எங்களை கவனிக்கல தம்பி ..."
".............."
"சரி, அவனுங்களை ஏன் நம்பணும்னு , கெளம்பி சென்னை வந்துட்டேன் - எதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு."
" ?!?!?!?! "
"என் பொஞ்சாதி வேற ஒடம்புக்கு முடியாம ஊர்ல கெடக்கா தம்பி..."
"ம்ம்ம்ம்...."
"ஆனா, வயசாயிடுச்சேன்னு இந்த கெழவனுக்கு யாரும் வேல தர மாட்டேங்கறாங்க தம்பி..."
"ஓ....!"
"இப்போ திரும்பி ஊருக்கே போய்டலாமுன்னு தோணுது..."
"ம்ம்ம்..."
"ஆனா கையில சுத்தமா காசு இல்ல தம்பி - பஸ்ல போனா கொறஞ்சது 500 ரூபா ஆகும். ஆனா, ECR ல நின்னு எதாவது லாரில ஏறி 100 ரூபா கொடுத்தா ஊர்ல எறக்கி விட்டுருவாங்க ! கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி - ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !"
நன்றி - புகைப்பட உதவி :www.shutterstock.com
**********************************************************************************************
சொல்லி முடிதவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.
எவ்வளவு கஷ்டம் ?! ஒருவரிடம் உதவி கேட்பதற்கு முன்பு நாம் எவ்வளவு யோசிப்போம் ?! அதுவும் முகம் தெரியாத ஒருவரிடம் ? ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும் தானே ?! அதுவும் தன் பேரனைப் போல வயதுடைய ஒருவனிடம் காசுக்காக கேட்டு நிற்பது என்றால் , அவர் எவ்வளவு யோசித்திருப்பார் ? இது வரை எத்தனை பேரிடம் கேட்டிருப்பாரோ ? பரிதாபம் .
ஆனால் , நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! மாதம் ஆயிரக் கணக்கில் (!) சம்பாதிக்கிறோமே, ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது, இல்லையில்லை ஒரு 50 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! பாவம் பெரியவர். 50 ரூபாய் எடுத்த என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்.
"லாரிக் காரங்க 100 ரூபாய்க்கு கொறைஞ்சு ஏத்த மாட்டாங்க தம்பி"
ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! 100 ரூபாயைக் கொடுத்து ,
"சரிங்க ஐயா.அழுவாதீங்க . பத்திரமா ஊருக்குப் போய் சேருங்க " ன்னு சொல்லி அனுப்பினேன். நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! அன்று முழுவதும், பெரியவர் ஊருக்குப் போய் விட்டதாகவும், பொஞ்சாதியுடன் சந்தோசமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டேன் .
**********************************************************************************************
ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். இது நடந்து.
என்னைப் போலோருவன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் அதே பெரியவர் அவனருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக அவனுடனான உரையாடலை ஆரம்பித்தார், அவன் பதிலை எதிர்பார்க்கமலேயே !
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "
நன்றி - புகைப்பட உதவி : www.oxheyworld.com
மீதியை படிக்க, அவன் வலைத்தளம் எழுதுகிறானா என அறிந்து கொள்ள வேண்டும்!
ஒருவேளை அவனுக்கும் ஆண்டவன் ரெண்டு மடங்கு படி அளந்திருக்கிறானோ என்னவோ ?!
Saturday, November 20, 2010
இனி என்(ண்) நம்பர் !
எல்லோர் எண்ணங்களிலும் சில எண்கள் நிழலாடிக் கொண்டுதானிருக்கின்றன ! அப்படி, சில பிரபலங்களின் எண்ணங்களில் இருக்கும் எண்கள் என்னவாக இருக்கும் ? ஒரு கற்பனை ! " எதனால் அந்த எண்கள் ? " என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் !
நன்றி - புகைப்பட உதவி www.knitwareblog.com
நன்றி - புகைப்பட உதவி www.knitwareblog.com
செல்வி .ஜெ.ஜெயலலிதா , திரு .ஆ.ராசா - 1700000000000 ( கரெக்டான்னு தெரியல !)
முதல்வர் கலைஞர் - 118
கேப்டன் விஜயகாந்த் - 100
பிரதமர் மன்மோகன் சிங் - 2 (G ! )
திரு .சச்சின் டெண்டுல்கர் - 400
மருத்துவர் ராமதாஸ் - 1
தமிழ்நாடு - 2011
இந்தியா - 2020
இந்தியா - 2020
ஒபாமா - 123
உங்களுக்கு தெரிஞ்சு ஏதாவது MISS ஆகியிருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க !
Saturday, November 13, 2010
மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !)
நன்றி - புகைப்பட உதவி : www.thehindu.com
பரபரக்கும் காலைப் பொழுது....
மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..
அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்
எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...
தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,
தந்தையாகவோ , கணவனாகவோ -
தந்தையாகவோ , கணவனாகவோ -
இருக்கக் கூடாதென...
நின்று செல்லும் பேருந்துகளின்
ஒவ்வொரு ஜன்னலில் இருந்து
வெளிப்படும் முகங்களைப் பார்க்கிறான்,
தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,
மகனாகவோ ,மனைவியாகவோ -
மகனாகவோ ,மனைவியாகவோ -
இருக்கக் கூடாதா என !
Sunday, October 31, 2010
கொஞ்சம் உதவலாமா ?!
இந்த இடுகையை எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை ! பிளாக்கர் விதிமுறைகளின் படி இது சரியா என்றும் தெரிய வில்லை ! ஆனால், ஒரு நல்ல விஷயத்திற்க்காகத்தான் என்பதால் தொடர்கிறேன் !
என் நண்பன் ஒருவனின் COUSIN சகோதரனுக்காக , அவன் அனுப்பிய மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய சென் விகாஷ் என்னும் அந்த சிறுவனுக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லை . இதற்கான சிகிச்சையை பெற கோவையில் உள்ள ஒரு மருத்துவ மனையை அணுகிய போது , COCHLEAR IMPLATATION SURGERY என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் ! அதற்கான செலவு சுமார் ஆறு லட்சம் ரூபாய் ஆகும் என்றும் ! நண்பர்களின் உதவியால் இப்போது சுமார் மூன்று லட்சம் ரூபாய் திரட்டியாகிவிட்டது ! ஆனால் டிசம்பரில் செய்வதாக சொல்லியிருந்த அறுவை சிகிச்சையை இப்போது நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் . மீதி மூன்று லட்ச ரூபாய் திரட்டும் முயற்சியில் இருக்கிறாகள் சென்விகாஷின் பெற்றோரும் என் நண்பனும் !
கொஞ்சம் உதவலாமா ?!
ICICI ACCOUNT NO - 021201587702 , SANTHOME BRANCH ,
இராஜேந்திரன் - 98944 78214 (சென் விகாஷின் தந்தை)
என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் .
நீங்கள் பணம் அனுப்பும்போது REMARKS இல், CHEN VIKASH என்று குறிப்பிடவும்.பின்பு, மேலே உள்ள இருவரில் ஒருவருக்கு தெரியப்படுத்தி விடவும்.
அந்த மருத்துவ மனை இணைய தளத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
http://enthospital.in/appeal.htm
மேற்கண்ட LINK ஐ VISIT செய்யவும். நன்றி !

மேலும் விவரங்களுக்கு :
பால முரளி - 91766 01928 (என் நண்பன் - சென் விகாஷின் COUSIN அண்ணன்).ICICI ACCOUNT NO - 021201587702 , SANTHOME BRANCH ,
இராஜேந்திரன் - 98944 78214 (சென் விகாஷின் தந்தை)
என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் .
நீங்கள் பணம் அனுப்பும்போது REMARKS இல், CHEN VIKASH என்று குறிப்பிடவும்.பின்பு, மேலே உள்ள இருவரில் ஒருவருக்கு தெரியப்படுத்தி விடவும்.
அந்த மருத்துவ மனை இணைய தளத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
http://enthospital.in/appeal.htm
மேற்கண்ட LINK ஐ VISIT செய்யவும். நன்றி !
Thursday, October 21, 2010
2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்
டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்" பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு !
எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் பட்டது. யார் மனதையும் புண் படுத்த அல்ல !
***************************************************
"தலைவர் ஏன் கோவமா இருக்கார் ?!"
" '2016 வரை கூட்டணியில் இருந்தாதான் 4 எந்திரன் டிக்கெட் கொடுப்பேன்' ன்னு கூட்டணி தலைவர் சொல்லிட்டாராம் !"
***************************************************
அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
***************************************************
"இந்த தடவை அந்த கட்சி தான் தேர்தல்ல ஜெயிக்கும்னு எப்படி உறுதியா சொல்லுற ?!"
"அந்த கட்சியில்தான் ஒரு ஓட்டுக்கு ரெண்டு 'எந்திரன்' டிக்கெட் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க "
***************************************************
"நம்ம தலைவர் ஏன் ரொம்ப சந்தோசமா இருக்கார் ?!"
"இன்னைக்கு நடக்குற பொதுக் கூட்டத்துல , தலைவருக்கு 'எந்திரன்' ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்களாம் ! "
***************************************************
"தலைவர் ஏன் 'நான் 40 , 50 டிக்கெட்டுக்காக கட்சி நடத்தலை' ன்னு அறிக்கை விடுறார் ?!'"
" 'எங்க கூட்டணியில சேர்ந்தா 50 எந்திரன் டிக்கெட் கொடுக்கறேன் ', கூட்டணி தலைவர் சொன்னாராம் !"
***************************************************
தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க !
***************************************************
நன்றி - புகைப்பட உதவி : www.indiaglitz.com , www.hindu.com
Subscribe to:
Posts (Atom)
மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...
-
எல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள். அது, டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்...
-
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...
-
அறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல. எச்சரிக்கை : இளகிய மனம் ...