Sunday, October 31, 2010

கொஞ்சம் உதவலாமா ?!

இந்த இடுகையை எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை ! பிளாக்கர் விதிமுறைகளின் படி இது சரியா என்றும் தெரிய வில்லை ! ஆனால், ஒரு நல்ல விஷயத்திற்க்காகத்தான் என்பதால் தொடர்கிறேன் !

என் நண்பன் ஒருவனின் COUSIN சகோதரனுக்காக , அவன் அனுப்பிய மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய சென்  விகாஷ் என்னும் அந்த சிறுவனுக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லை . இதற்கான சிகிச்சையை பெற கோவையில் உள்ள ஒரு மருத்துவ மனையை அணுகிய போது , COCHLEAR IMPLATATION SURGERY என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் ! அதற்கான செலவு சுமார் ஆறு லட்சம் ரூபாய் ஆகும் என்றும் ! நண்பர்களின் உதவியால் இப்போது சுமார் மூன்று லட்சம் ரூபாய் திரட்டியாகிவிட்டது ! ஆனால் டிசம்பரில் செய்வதாக சொல்லியிருந்த அறுவை சிகிச்சையை  இப்போது நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் . மீதி மூன்று லட்ச ரூபாய் திரட்டும் முயற்சியில் இருக்கிறாகள் சென்விகாஷின் பெற்றோரும் என் நண்பனும் !
கொஞ்சம் உதவலாமா ?!



மேலும் விவரங்களுக்கு :
பால முரளி - 91766 01928 (என் நண்பன் - சென் விகாஷின் COUSIN அண்ணன்).
ICICI ACCOUNT NO - 021201587702 , SANTHOME BRANCH ,

இராஜேந்திரன் - 98944 78214 (சென் விகாஷின் தந்தை)

என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் .

நீங்கள் பணம் அனுப்பும்போது REMARKS இல், CHEN VIKASH என்று குறிப்பிடவும்.பின்பு, மேலே உள்ள இருவரில் ஒருவருக்கு தெரியப்படுத்தி விடவும்.

அந்த மருத்துவ மனை இணைய தளத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
http://enthospital.in/appeal.htm
மேற்கண்ட LINK ஐ VISIT செய்யவும். நன்றி !

Thursday, October 21, 2010

2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்

டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்"  பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு ! 


எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் பட்டது. யார் மனதையும் புண் படுத்த அல்ல !

***************************************************
"தலைவர்  ஏன் கோவமா இருக்கார் ?!"
" '2016  வரை கூட்டணியில் இருந்தாதான் 4 எந்திரன் டிக்கெட் கொடுப்பேன்'  ன்னு கூட்டணி தலைவர் சொல்லிட்டாராம் !"

***************************************************
அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

 ***************************************************
 "இந்த தடவை அந்த கட்சி தான் தேர்தல்ல ஜெயிக்கும்னு எப்படி உறுதியா சொல்லுற ?!"
"அந்த கட்சியில்தான் ஒரு ஓட்டுக்கு ரெண்டு 'எந்திரன்' டிக்கெட் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க "

 ***************************************************
"நம்ம தலைவர் ஏன் ரொம்ப சந்தோசமா இருக்கார் ?!"
"இன்னைக்கு நடக்குற பொதுக் கூட்டத்துல , தலைவருக்கு 'எந்திரன்' ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்களாம் ! "



 ***************************************************
"தலைவர் ஏன் 'நான் 40 ,  50  டிக்கெட்டுக்காக கட்சி நடத்தலை' ன்னு அறிக்கை விடுறார் ?!'"
" 'எங்க கூட்டணியில சேர்ந்தா 50 எந்திரன் டிக்கெட் கொடுக்கறேன் ',  கூட்டணி தலைவர் சொன்னாராம் !"

 ***************************************************


தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ! 

 ***************************************************

நன்றி - புகைப்பட உதவி :  www.indiaglitz.com , www.hindu.com

Friday, October 8, 2010

யாரடி நீ காமினி ?! ( சவால் சிறுகதை )


அறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல. 

எச்சரிக்கை : இளகிய மனம் படைத்தவர்கள், வயதானவர்கள்  , இருதய நோய் உள்ளவர்கள்,தன்னுடன் யாராவது ஒரு தைரிய சாலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும். விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

டிஸ்கி : இப்படியெல்லாம் போட்டாதான் ஒரு கதை மாதிரி பில்ட் அப் ஆவது ,கொடுக்க முடியும் !

***************************************************
எல்லாருக்கும் வணக்கம்.நல்லாயிருக்கீங்களா ?! நம்ம பரிசல் அண்ணாச்சி ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தாரு இல்ல ?! சரி நாமளும் எழுதிதான்  பார்ப்போமே என்ற ஒரு எண்ணத்தில் உதித்தது (!) தான் இந்த சிறுகதை (!!).  சரி, உக்கார்ந்து ஒரே மணி நேரத்துல எழுதி முடிச்சிரலாம்னுதான் நெனச்சேன் ! ஆனா, உண்மையிலேயே ஒரு வாரமாச்சுங்க இத எழுதுறதுக்கு ! எதாவது லாஜிக் குறைபாடுகள் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க. செகண்ட் பார்ட்டுல (ஆஹா, இதுல இது வேறயா ?! ) திருத்திடலாம்.

பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு!
இனி, சரவெடி !!!

***************************************************
 காமினி இந்த வார்த்தைகளை  சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஏன், சிவாவும் தான்.சுந்தரம் எப்போதுமே இவ்வாறு பேசிப் பார்த்ததில்லை இருவரும்.
"ஐயா எவ்ளோ வாட்டி சொல்லியும், இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்களே ?! இப்படி சொதப்புவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, பேசாம செல்வத்துக்கிட்டயே  இத செய்ய சொல்லிருயிருப்பேன் ". இதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லையே ?!
இதற்கு அப்புறம் சொன்ன வார்த்தைகளுக்குத்தான் முதல் வரி.

சுந்தரம் தான் பரந்தாமனுக்கு வலது கை, வலது கண், வலது கால், வலது காது எல்லாமுமே.பரந்தாமனிடம் அவ்வப் போது  சண்டை போட்டுக் கொண்டு விருதாச்சலதிற்கு சென்று விட்டாலும் , இருப்பு கொள்ளாமல் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர் வீட்டிற்கே வந்து விடுவார். சுந்தரம் இல்லாத நாட்களில் பரந்தாமனுக்கு செல்வம் தான் சுந்தரம்.இன்றும் அப்படித்தான்.


"ஐயா, நா வேணும்னா டவுன் வரைக்கும் போய் சுந்தரத்தை இட்டுனு வந்துடட்டுங்களா ? " . செல்வத்தின் கேள்விக்கு வழக்கமான பதில்தான், பரந்தாமனிடமிருந்து. "நாயி எங்கடா போயிட  போவுது ?! ரெண்டு நாளானா, தானா வால ஆட்டிட்டு இதே வாசலுக்கு தானே வந்தாகணும் ?! விடுறா. சாயங்காலத்துக்குள்ள குடோனுக்கு போய், லோடு இறங்கிடுச்சான்னு  பாத்துட்டு போன் பண்ணு ". பதிலின் மறுமுனையில், டிராக்டர் வந்து நிற்க, செல்வம் தன்னுடன் நான்கு வேலையாட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.

***************************************************

ந்தமுறை எப்படியாவது அந்த வைரத்தை எடுத்தாக வேண்டும். சுந்தரத்திற்கு பரந்தாமனின் வார்த்தைகள் தான் வேதம். நான்கு முறை தவறவிட்டாகிவிட்டது. இன்னொருமுறை ஐயா பொறுமையாக இருக்க மாட்டார். ஆகவே தான், எவ்வளவு செலவானாலும் தேவலை,கிஷோரிடம் சொல்லி மெட்ராசிலிருந்து ஆட்களை இறக்கி விடலாமென்று யோசித்தான்.அந்த யோசனை தான் காமினியும் சிவாவும் இன்று விருதாச்சலதிற்கு வரக் காரணம். இருவரும் கிஷோரின் நண்பர்கள் தான். கிஷோர் சுந்தரத்தின் மகன் என்பது உங்களுக்கும், எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் தான் தெரியும் ! அவர்தான், மெட்ராஸ் காலேஜில்  சீட் வாங்கிக் கொடுத்து கிஷோரை படிக்க வைத்தார். ஆனால், ஏற்கனவே ஒருமுறை இவர்கள் நேரடியாக களத்தில் இறங்க, கொஞ்சம் எசகுப் பிசகாகிப் போனதால், "இந்த முறை குறி கரெக்டா இருக்கணும் ! " என்று சொல்லிக் கொண்டாள் காமினி .


***************************************************

ந்த வைரம் பரந்தாமனின் சேர்த்து வைத்திருந்த நகைகளில்  மிக முக்கியமானது. போனமுறை கரும்புத் தோப்புக்கு அருகில் கிணறு வெட்டும் போது கிடைத்த புதையலில் இருந்த ஒரே வைர நகை அது ஒன்றுதான். கோவில் திருவிழாவிற்காக பரந்தாமன் பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவதற்குள் , தர்ம கர்த்தா பெரிய நாயகம் தனது வேலையை காட்டி விட்டார். இப்போது அது இருப்பதும்  அவர் வீட்டில் தான்! ஆனால், அவ்வளவு ஈசியாக அவர் வீட்டிற்குள் போய்விட முடியாது. தனது பாதுகாப்புக்கென்று, போலீஸ் பாதுகாப்பை காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார் பெரியநாயகம் . பெரிய நாயகம்தான் அவர்களுக்கு DSP , IG , எல்லாமுமே !



ப்படி உள்ளே போவது ?!


பெரியநாயகம் ஒடம்புக்கு முடியாத நிலையில், ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.
எல்லாம் இந்த வெத்தல பாக்கு போடறதால வந்தது.ஏற்கனவே கேன்சர் முத்திப் போயிருந்தது. டாக்டரும், கண்ணாடியை கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே சொல்லி விட்டார் - "எதையும் ஒரு 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும் ! ".

"சரி அப்போ 24 மணி நேரம் கழிச்சு வரோம் எசமான்" என்று பெரிய நாயகத்தின் ஆட்கள் கழன்று கொண்டார்கள்.

மளிகை சாமானுக்கே காசில்லாத போது, இடைத் தேர்தல் வந்தால் எப்படி இருக்கும் ?! இந்த செய்தியும் அப்படிதான் இருந்தது சிவாவிற்கும் காமினிக்கும்.செய்தி கேட்டவுடன், காமினி தன் கையை அறுத்துக் கொண்டாள். எதற்கா ? அப்போதானே, பெரிய நாயகம் இருக்கும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியும் ?! காமினி எப்போதுமே இப்படித்தான்.

***************************************************
விசாலம் மருத்துவ மனை
அறை எண் 392 .
காலை 11 . 30 மணி.

இன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னதால், பெரிய நாயகம், வண்டியை வர சொல்லியிருந்தார். யாரோ புது டிரைவர் என்று சொன்னார்கள்.

அதே விசாலம் மருத்துவ மனை ,
அதே அறை அல்ல , பக்கத்து அறை எண் 393 .
காலை 11 . 35 மணி.

காமினியின் கையை சுற்றியிருந்த குளுக்கோஸ் வயர்கள் இன்னும் கழற்றப் படவில்லை. இன்னும் ஒரு நாள் வரைக்கும் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று டாகடர் சொல்லி விட்டார். டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, காமினியின் கண்களும், காதுகளும் பக்கத்துக்கு அறையை உற்றுப் பார்த்துக் கொண்டும், ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தன .



டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றி விட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

நாம் எதிர் பார்த்தது போலவே ( எதிர்பார்த்தீர்கள் தானே ?!) அவள் குதித்த இடம் , பெரிய நாயத்தின் ஜீப் தான் ! அசந்து தூங்கிக் கொண்டிருந்த நாயகம் இதை கவனிக்க வில்லை ! ஆனால், டிரைவர் பார்த்து விட்டான் !ஆனால் ஒன்றும் சொல்லவில்லை . ஏனென்றால், அவன் பெயர் சிவா ! வண்டியை நேரே பெரிய நாயகத்தின் பங்களாவிற்கு விரட்டினான்.

***************************************************

ன்னதான் பிளான் போட்டாலும், வில்லனின் வீட்டிற்குள் அவனுக்கே தெரியாமல் புகுந்த கதா நாயகி , ஒரு சமயம் அவனிடம்  மாட்டிக் கொள்ள  வேண்டும் இல்லையா ?! காமினிக்கும் அதுதான் நடந்தது . ஹாலில் நடுநாயகமாக , படுத்திருந்த பெரிய நாயகம் சற்று சோர்ந்து போய்தான் காணப் பட்டார்.அவர்  புது டிரைவரைப் பார்த்து கண்ணசைக்க, அவன் தலையசைத்தான். அசைத்து  முடிக்கையில், அவன் கையிலிருந்து துப்பாக்கி வெளிப்பட்டது !



 “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


"சாரி எனக்கும்  வேற வழி தெரியல" என்று சொன்ன காமினி , கண்ணிமைக்கும் நேரத்தில், பெரிய நாயகத்தை சுட்டு விட்டு, டிரைவர் சிவாவுடன் பங்களாவிலிருந்து வெளியேறினாள்.



காவலுக்கு இருந்த போலீஸ் காரர்கள் , "ஐயாவுக்கு திரும்ப ஒடம்புக்கு முடியாமப் போயிடிச்சு . டவுன் வரைக்கும் போய் , டாக்டர் ஐயாவைக் கூட்டினு வந்திடுறோம்" என்று அவர்கள் சொன்னதை நம்பித்தான் ஆக வேண்டும் !ஜீப்பை வேகமாக விரட்டிய படி,அவர்கள் வந்து நின்ற இடம், பரந்தாமனின் பங்களா.

 “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

எதிர்பார்த்த பாராட்டுதான் என்றாலும், காமினி, செயற்கை சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சிவாவைப் பார்த்தாள். "ஐ ஆம் சாரி மிஸ்டர் பரந்தாமன். இந்த வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்கறதுக்காக நாங்க இத மீட்கல ! ஞாயப்படி,சட்டப் படி, (இந்த கதைப் படி !) இதை  அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும் ! அதை செய்யத்தான் நாங்க இங்க வந்தோம். இந்த வைரத்தோட கெடைச்ச மத்த நகைகள் ஏங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் !" என்று தங்களின் அடையாள அட்டையை சிவாவும் காமினியும் காண்பித்தனர். அந்த அடையாள அட்டைகளில் அச்சிடப் பட்ட  "தமிழ் நாடு - காவல் துறை" என்ற  எழுத்துக்கள் பரந்தாமனின் கண்களில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியதில் ஆச்சர்யம் இல்லை  !

கிஷோரின் வேண்டுகோளுக்கிணங்க, பரந்தாமன் மேல் வழக்கு ஏதும் போடாமல், புதையலுடன் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் சிவாவும், காமினியும்  !

கிஷோர் சொன்ன போதே, புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கத் தேவையில்லை! பெரியநாயகமும் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கத் தேவையில்லை !


**************முற்றும்**************


"அதெல்லாம்  சரி, சிறுகதை எழுதிருக்கேன்னு சொன்னியே , அது எங்க ?" என்று கேட்பவர்களுக்கு, அவர்களின் இடுகைக்கு வந்து இதையே பின்னூட்டமாகப் போடப் படும் என்று ஒச்சரிக்கிரேன்  ! ச்சீ .... எச்சரிக்கிறேன் !

புகைப்பட உதவி : http://paadumeen.blogspot.com, http://view.fdu.edu, http://agnosticnihilist.wordpress.com/

Tuesday, October 5, 2010

என்ன செய்ய ? - கவிதை(யாமாம் !)

 டிஸ்கி : கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.





இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி... 


ஆனால்....

பூ விழுந்தால்  போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!



புகைப்பட உதவி - www.delawareonline.com

************************************************************************************************
இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !

Thursday, September 30, 2010

நகைச்சுவை - நேர்முகத் தேர்வுகள் நடைபெறுவது எப்படி ?!


டிஸ்கி : எதோ ரொம்ப சீரியசான இடுகைன்னு நெனைச்சு வந்தவங்க மன்னிக்கணும். வழக்கம் போல, நகைச்சுவைங்கற பேர்ல மொக்கை தான் !

*********************************************************************************************************

எங்கள் கல்லூரியில், நடைபெறும் கலைநிகழ்சிகளில் , நாங்கள் MIMING என்ற பெயரில், பல மொக்கைகள் போட்டிருக்கிறோம்.எல்லாமே "ரீமிக்ஸ்" தான். பக்கத்துக்கு கல்லூரியில் நடந்த MIMING ஐ, அப்படியே பட்டி பார்த்து, டிங்கரிங் பண்ணி மேடையேற்றினோம். முதல் முறை, நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. பின்பு அதே MIMING ஐ மூன்று முறை PERFORM பண்ணின போது, அதை விட "பயங்கர" ரெஸ்பான்ஸ் ! இந்த எல்லா MIMING க்கும், நாந்தான் டைரக்டர் ! (நாங்க எல்லாருமே இப்படித்தான் சொல்லிக்குவோம் !)


அப்படியான ஒரு கலைநிகழ்ச்சியில்,  ஒரு கம்பெனிக்கு எல்லா நடிகர்களும் நேர்காணலுக்கு வருவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. அதற்குரிய வாசனைகளை நான் எழுத, சக படைப்பாளி (!) ஒருவன், வடிவேலு போல  மிமிக்ரி செய்து அரங்கேற்றினோம் ! அந்த வசனம் இங்கே உங்கள் பார்வைக்கு !


*********************************************************************************************************


"ஏங்க , நேத்து இண்டர்வியூக்கு போனீங்களே என்ன ஆச்சு ?"




"அதா ஏம்மா கேக்குற ?"


"ஏன் என்னங்க ஆச்சு ?!"


"மொதல்ல ஒரு ரெண்டு பேருதாம்மா  கேள்வி கேட்டானுங்க. அப்புறம் அதுல ஒருத்தன், திடீர்னு MGR க்கு போன் போட்டு,
'மச்சான், இங்க ஒருத்தன் சிக்கியிருக்கான் , நீ கொஞ்சம் வர முடியுமா' ன்னு கேட்டான் !"


"எது, MGR க்கு போன் போட்டானா ?"

"ஆமாம்மா, எல்லா 'கம்பேனிலையும்' இருப்பானுங்க இல்ல ? இந்த வேலைக்கு ஆளு எடுக்குற பயலுக !"


"ஓஹோ , HR க்கு போன் போட்டாங்கன்னு சொல்லுங்க!"




"அது என்ன எழவோ தெரியலம்மா. அப்புறம் அங்க போனா, அங்க ஒரு மூணு  பேரும்மா, ஒன்ற(1 .5 ) மணிநேரம்,  அவனுங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்விம்மா, சும்மா திணறத் திணற கேட்டானுங்க."


"ஹ்ம்ம்...?!"



"நானும் சரி கேட்டுட்டு போங்கடான்னு விட்டுடேன். நானும் எவ்ளோ நேரந்தான், பதில் தெரிஞ்சா மாதிரியே நடிக்கிறது ?!"


"இவ்ளோ கேள்வி கேட்டானுங்களே, நீங்க ஒன்னும் சொல்லலையா ?!"


"ஹ்ம்ம்ஹூம்..."


"ஏங்க ?!"

"கேள்வி கேட்டிட்டுருக்கும்  போது அதுல ஒருத்தன் சொன்னான்,
'மச்சான், எவ்ளோ கேள்வி கேட்டாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்'னு ஒரு வார்த்த சொல்லிட்டாம்மா !!!"




*********************************************************************************************************
 இவ்வாறாக, ஒருவழியாக வேலை கிடைச்சாச்சு ! அப்புறம், வேறென்ன ?! "இன்கிரிமென்ட்" தானே ?!


அதுக்கும் ஒரு கதை இருக்கு, 
அதை இங்கே CLICK பண்ணி  பாத்துக்குங்க!
சம்பள உயர்வு பெறுவது எப்படி ?!
ஆனா, இங்க வடிவேலுதான் முதலாளி !

புகைப்பட உதவி : ராஜ் டிவி, YOU TUBE, iStream.in

Sunday, September 5, 2010

நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 3

நான் ரொம்பவும் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று நான் நானே நினைத்துக்  கொள்வேன் ! 

அது எப்படி என்று கேட்கிறீங்களா ?! 








முதல் வரியை மீண்டும் படிக்கவும் !


அவ்வாறு நான் நினைக்க காரணமாயிருந்த சில தருணங்களில், நான் கூறிய வசனங்களை இங்கே ஒரு தொடராக இடுகையிட்டு வருகிறேன். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன (!) .




நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 1 
நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 2

முடிந்தால், அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்களேன் ?!

 *********************************************************************************************************

அலுவலகத்தில், சூடான அரசியல் விவாதங்கள் அடிக்கடி நடக்கும். ஒருநாள், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருக்கும் (?) ,கிரீன் பீல்ட் விமான நிலையம் பற்றி பேச்சு திரும்பியது. அந்த விமான நிலையத்திற்கு ஏன் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

"விவசாய நிலங்களில் அமைய இருப்பதால் அப்படி பேர் வெச்சிருப்பாங்க  ?! " ன்னு சொல்லி  வைத்தேன்.


 *********************************************************************************************************

அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளார் ஒருவர், இடது கையால் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஓரளவிற்கு எழுதினாலும், மெதுவாகவே எழுத முடிந்தது அவரால் ! என்னருகே வந்து அவ்வாறு எழுதிக் காண்பித்தார்.

"நான் இதவிட  வேகமா இடது  கையில் எழுதுவேன் " என்றேன்.


"நிஜமாவா ?!"

"ஆமாங்க !" - இது நான்.

20 நொடி இடைவெளி....

"ஆனா யாரும் படிக்க முடியாது !"



 *********************************************************************************************************

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு விடுமுறைக்கு தவறாமல் ஊருக்கு சென்று விடும் நண்பனொருவன், இந்த வாரம் போகாமல், சென்னையிலேயே இருந்துவிட்டான். நான் அலைபேசியபோது இதை என்னிடம் சொன்னான்.

"ஏண்டா இந்த வாரம் ஊருக்கு போகல ?!" - நான்.

"சித்தப்பாவும், சித்தியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க டா" - நண்பன்.

"அவங்களுக்குதான் , ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே டா ?!" - நான் !

புகைப்பட உதவி - http://iconicon.net

Saturday, August 28, 2010

நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?

ஹ்ம்ம்.... வாங்க... வாங்க... உங்களைதான் தேடிட்டு இருந்தேன்.
"நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?" ங்கற தலைப்பை பார்த்தவுடனே, "ஆஹா ! இதைத்தானே இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தேன் ?!" ன்னு சொல்றீங்களா ?! நீங்க சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க!

அ. நீங்கள் திருமணமான ஆணா ?
ஆ. நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறீர்களா ?

மேற்கண்ட மூன்று கேள்விகளில் எதாவது ஒன்றிற்கு உங்களுடைய பதில், "ஆம்" என்றால், மேலே படிங்க !

இது எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல்.கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி'  இருக்கிறேன். மின்னஞ்சலிய நண்பனுக்கும், இதன் உண்மையான 'ஓனருக்கும்' நன்றி.

பொது நலன் கருதி வெளியிடுவோர் : உங்கள் தேசாந்திரி - பழமை விரும்பி.

##########################################################################################

ஒரு ஊர்ல ஒரு வயசான தம்பதி இருந்தாங்க. அவங்களுக்கு  கல்யாணமாகி 65 வருசமாச்சு! ஆணா இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒரு சின்ன சண்ட கூட போட்டதில்ல ! இதப் பார்த்து ஊர்ல இருக்க எல்லாரும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க !
உடனே, எல்லாருமா சேர்ந்து முடிவு பண்ணி அவங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணாங்க. (ஆஹா, திரும்பவும் ஒரு பாராட்டு விழாவா ?!)

அந்த விழாவுல நெறைய பத்திரிக்கைக்காரங்களும்  கலந்துகிட்டாங்க. அதுல ஒருத்தர், ஆர்வம் தாங்காம , அந்த புருஷன் கிட்ட கேட்டாரு ,"அது எப்புடிங்க ?! 65  வருசத்துல ஒரு தடவ கூட சண்ட போடாம உங்களால இருக்க முடிஞ்சுது  ?!"



அதுக்கு அந்த கிழவர் சொன்னாராம்,

"தம்பி, எங்களுக்கு கல்யாணமான அடுத்த நாளே, நாங்க ஹனிமூனுக்கு மெட்ராஸ் வந்தோம், எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டு கடைசியா மெரீனா பீச்சுக்கு போனோம். அங்க குதிர சவாரி போகணும்னு அவ ஆசப் பட்டா. சரின்னு, அவ ஒரு குதிரையிலயும், நான் ஒரு குதிரையிலயும் சவாரி பண்ண ஆரம்பிச்சோம் !"

"ஹ்ம்ம்..."

"என் குதிரை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா , அவ வந்த குதிரை சரியாவே ஓடல. ஒரு முறை, அவள கீழ தள்ளி விட்டுடிச்சு. அவ, குதிரையை பார்த்து ஒச்சரிச்சா... ச்சி எச்சரிச்சா, 'இது உனக்கு முதல் தடவை...'  "

"ஹ்ம்ம்ம்..."

"திரும்பவும் மேல ஏறி, சவாரி பண்ண ஆரம்பிச்சா... ஆனா பாரு , அந்த குதிர ரெண்டாவது தடவையும் அவள கீழே தள்ளிடுச்சி ! கொஞ்சம் கோவமான எம்பொண்டாட்டி, குதிரையைப் பார்த்து சொன்னா, 'இது உனக்கு ரெண்டாவது தடவை !' "

"ஹ்ம்ம்ம்ம்..."

"ஆனா, அடுத்த வாட்டியும் அவளை கீழ தள்ளிடுச்சு அந்த குதிரை. உடனே, பக்கத்துல  இருந்த பெரிய பாறாங்கல்ல தூக்கி, அது மேல போட்டு , அந்த குதிரைய கொன்னே போட்டுட்டா..."

"ஹ்ம்ம்ம்ம்ம்..."

"உடனே நான் கேட்டேன், 'ஏண்டி, உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா ?! பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்புடி கல்லத் தூக்கிப் போட்டு கொன்னுட்டியே ?!'"

"ஹ்ம்மம்ம்ம்ம்..."

"அதுக்கு அவ சொன்னா, 'யோவ், இது உனக்கு முதல் தடவை...' ! இப்போ தெரியுதா ?! நான் எப்புடி 65  வருஷம் ஓட்டினேன்னு ?!'"



##########################################################################################

சரி நீங்க கல்யாணமானவரா, இல்லையான்னு எப்புடி கண்டு பிடிக்கிறது ?
இடுகையோட ஆரம்பத்துல, மூணு கேள்வி கேட்டிருந்தேன்னு  சொன்னேன்  இல்ல ?!

இல்லை.

 உண்மையிலேயே ரெண்டு கேள்விதான் இருக்கு. இத நீங்க கண்டுக்காம படிச்சிருந்தா, உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுங்கறது கன்பார்ம்டு !


 புகைப்பட உதவி : http://acarelessdreamer.typepad.com/ , http://waltonportfolio.com

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...